Puttalam Online
regional-news

கோவிட் – 19 பாதுகாப்பு சுகாதார பொருட்கள் விநியோகம்

  • 17 February 2021
  • 176 views

(ரூசி சனூன் புத்தளம்)
 
கொரோனா தொற்றிலிருந்து உயிர்களைப் பாதுகாக்க நாடு முழுவதும் வெவ்வேறு தரப்பினர்களும் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருக்கும் நிலையில் யூஎஸ்எய்ட் (MSI) நிறுவனத்தின் நிதி உதவியுடன் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் புத்தளம் மாவட்டத்தில் சமூக வலுவூட்டலுக்கான பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். 

அவ்வாறான நிகழ்ச்சி திட்டங்களில் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையக நிறுவனமானது கோவிட் 19 அசாதாரண சூழ்நிலையில் மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு முகக்கவசங்கள்கையுறைகள்டெட்டோல், கை சுத்திகரிப்பான், கை கழுவும் பாத்திரங்கள், சவர்க்காரம் உள்ளிட்ட  511,175 ரூபாய் பெறுமதி கொண்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கான பொருட்களை புத்தளம் மாவட்டத்தில் உள்ள 15 சிங்கள,தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இதர நிறுவனங்களுக்கும் வழங்கியுள்ளன.

புத்தளம்நாத்தாண்டியமுந்தல்கல்பிட்டிவணாத்திவில்லு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுக்கும், அப்பிரிவுகளுக்குட்பட்ட 30 கிளினிக் நிலையங்களுக்கும் இவைகளை வழங்கி வைத்துள்ளன.

புத்தளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிளினிக் நிலையங்களுக்கும், வண்ணாத்திவில்லு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிளினிக் நிலையங்களுக்கும் முந்தல் பிரிவுக்குட்பட்ட கிளினிக் நிலையங்களுக்கும், நாத்தாண்டியவிற்கு உட்பட்ட கிளினிக் நிலையங்களுக்கும், கல்பிட்டி பிரிவுக்குட்பட்ட  கிளினிக் நிலையங்களுக்கும் இப்பொதிகளை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவர்களும், சுகாதார நிலையங்களுக்கு வரும் பயனாளிகளும் சிறந்த  சுகாதாரமான முறையில் தனது சேவைகளை பெறும் நோக்குடன் இப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All