(இப்ராஹிம் நிஹ்ரிர்)
வண்ணாத்திவில்லு பிரதேச சபையினால் ஜுகி தையல் பயிற்சி நிலையம் ஒன்று (18/02/2021) இன்று கரைத்தீவு பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த தையல் பயிற்சி நிலையத்தை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ சிந்தக மாதுன்ன ஆகியோர் திறந்து வைத்தனர்.
இவ்வைபவத்தில் வண்ணாத்திவில்லு பிரதேசசபை உறுப்பினர் கௌரவ அனஸ்தீன் மற்றும் வண்ணாத்திவில்லு பிரதேச செயலாளர், பொதுமக்கள் போன்றோருடன் வண்ணாத்திவில்லு பிரதேச சபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
WAK
Share the post "கரைத்தீவு பகுதியில் தையல் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு"