“இணைய உலகிற்கான இறக்கைகள்” எனும் முழுத் தீவுக்குமான திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளுக்கான இணையத்தளம் தயாரிக்கப்பட்டு வெளியிடும் வைபவம் புத்தளம் வலயத்திற்குட்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் ஒன்றான எமது புத்தளம் பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் நேற்று 19.02.2021 காலை 10 மணிக்கு பாடசாலை அதிபர் திருமதி றஜியா சபியுத்தீன் அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
எமது பாடசாலை உதவி அதிபர் திருமதி மாஹிரா அவர்களின் வழிகாட்டலின் கீழ் கணனிக்கழக பொறுப்பாசிரியர் திருமதி ஸம்ஹா மஷர்ரத், ஆசிரியர்களான திருமதி மஸ்லஹா, திருமதி ஜான்சியா பேகம் மற்றும் மாணவிகளின் முயற்சியின் விளைவாக பாடசாலைக்கான வலைத்தளமானது உருவாக்கப்பட்டு நேற்றைய நிகழ்வில் அனைவரின் பாவனைக்கும்
விடப்பட்டது.
இப்பொன்னான தருணத்தில் கொவிட் சுகாதாரத்தை கருத்திற் கொண்டு பாடசாலை அதிபர், பிரதி அதிபர்கள் பகுதிதலைவர்கள், தகவல் தொழிநுட்ப ஆசிரியர்களும் கழக மாணவர்களும் மட்டுமே கலந்து பிரதிநிதித்துவப்படுத்தியதோடு, சிறப்பதிதிகள் DDE-Moe, WEB Com Director, Colombo university professor Dr dias அவர்கள் ஒன்லைன் மூலம் நேரடியாக தொடர்பு கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் கணனி கழகத்தினால் நடாத்தப்பட்ட விரைவாக மும்மொழியிலும் தட்டச்சு செய்தல், வினா-விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலை இணையத்தளத்தினை http://Nwputtalamfbmv.sch.lk இதனூடாக காணலாம்.
ஊடாக குழு மற்றும்,
கணனி கழகம்.
பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம்.
புத்தளம்.
WAK
Share the post "புத்தளம் பாத்திமாவின் உத்தியோக பூர்வ இணையத்தளம் ஆரம்பித்து வைப்பு"