Puttalam Online
regional-news

ஸாஹிரா மண்ணின் மைந்தர்கள் ஒன்றிணைவு

  • 20 February 2021
  • 150 views

(பசில் ஆசிரியர்)

புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் 76 ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் கல்லூரியினால் 12.02 2021 முதல் 21. 02. 2021 வரைக்கும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இத்தொடர் நிகழ்வில் 19.02.2021 (நேற்று) அஸ்வர் மண்டபத்தில் மாலை 6.30 மணியளவில் அதிபர் Mr. H. Abdul Jabber தலைமையில் ஸாஹிராவுக்காக ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் பழைய மாணவக் குழுமங்களின் ஒன்றுகூடல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்லுரி அதிபர் , அபிவிருத்திச் சங்க செயலாளர் மற்றும் பழைய மாணவர் சங்க செயலாளர் புத்தளத்தின் மூத்த கல்வியலாளர் Mr. Z. A Zanhir (முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர், புத்தளம்) போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.

எம்மவர்களை கௌரவிக்கும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக எமது கல்லூரியின் பழைய மாணவரும் School of Excellence அதிபருமான Mr. H. Ajmal அவர்கள் கலந்து கொண்டமை மனமகிழ்வைத் தருகிறது. நடப்பு வருடத்துக்கான பழைய மாணவர்கள் சங்க செயற்குழு உறுப்பினர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு இரவு விருந்துபசாரத்துடன் இனிதே நிறைவடைந்தது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All