Puttalam Online
other-news

சிரச லக்ஷபதி ஷுக்ரா முனவ்வர் கௌரவிப்பு

  • 21 February 2021
  • 153 views

(ரூசி சனூன் புத்தளம்)
 .
சிரச தொலைக்காட்சியில்  நடைபெற்ற  சிரச லக்ஷபதி நிகழ்ச்சியில் போட்டியிட்டு திறமையாக செயற்பட்டு வெற்றியீட்டிய  ஷுக்ரா முனவ்வரை கௌரவிக்கும் விஷேட  நிகழ்வொன்று (17) அண்மையில் ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.
 .
இதில் பிரதம அதிதியாக நீதி அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
 .
இதில் ஷுக்ரா முனவ்வரின் திறமையினைப் பாராட்டி கொழும்பு  அமேசன் கல்லூரியின் சார்பில் கல்லூரி மாணவர்களின் புலமைப்பரிசில் நிதியத்தின் மூலமாக  200,000 ரூபா பெறுமதியான  இலவச புலமைப்பரிசில் திட்டமொன்று கல்லூரியின் பணிப்பாளர் எஸ்.எம். இல்ஹாம் மரைக்காரினால்  வழங்கி வைக்கப்பட்டது.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All