Puttalam Online
other-news

புகையிரத பயணிகளுக்கான விஷேட அறிவித்தல்

  • 22 February 2021
  • 88 views

கட்டுநாயக்க மற்றும் புத்தளம் புகையிரத நிலையங்களுக்கு இடையிலான புகையிரத பயணங்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையில் தற்காலகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் புகையிரத பாதையின் குரண மற்றும் நீர்கொழும்பு புகையிரத நிலையங்களுக்கு இடையில் இரட்டை வழி பாதை அபிவிருத்து காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், குரண மற்றும் நீர்கொழும்பு இடையேயான புகையிரத பாதை 26 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் 28 ஆம் திகதி இரவு 8.30 மணி வரை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காலப்பகுதியில் கட்டுநாயக்க மற்றும் புத்தளம் புகையிரத நிலையங்களுக்கு இடையே புகையிரத சேவை முன்னெடுக்கபடாத காரணத்தினால், கொழும்பு கோட்டை மற்றும் கட்டுநாயக்க புகையிரத நிலையங்களுக்கு இடையில் மட்டுமே புகையிரத சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.ad.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All