Puttalam Online
regional-news

உள்ளக வீரர்களுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டி தொடர் 2021

  • 22 February 2021
  • 108 views

(ரூசி சனூன் புத்தளம்)
 .
புத்தளம் லிவர்பூல் கால்ப்பந்தாட்ட கழகம் நடாத்திய அதன் அங்கத்தவர்களுக்கிடையிலான அணிக்கு 07 பேர்களை கொண்ட மூன்றாம் கட்ட “உள்ளக வீரர்களுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டி தொடர் 2021”  தொடரில் லிவர்பூல் “ரெட் ” அணியினர் சம்பியனாகியுள்ளனர்.
 .
வைட் அணியினர் ரனரப்பாக தெரிவாகியுள்ளனர்.
 .
இந்த போட்டித்தொடர் வெள்ளிக்கிழமை (19) மாலை புத்தளம் இபுனு பதூதா வீதியில் அமைந்துள்ள லிவர்பூல் கால்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்றது.
 .
இந்த தொடரில் லிவர்பூல் கழகத்தின் வீரர்களை உள்ளடக்கிய யெலோ, புளூ, ரெட் மற்றும் வைட் ஆகிய நான்கு அணியினர் பங்கேற்றனர்.
 .
புள்ளிகள் அடிப்படையில் நடைபெற்ற இந்த போட்டித்தொடரில் அதி கூடிய புள்ளிகளை பெற்ற லிவர்பூல் ரெட் அணியும் வைட் அணியும் இறுதி போட்டியில் பலப்பரீட்சை நடாத்தின.
 .
இறுதிப்போட்டியில் ரெட் அணி 03 : 01 கோலினால் வெற்றிபெற்று சம்பியனாகியது.
 .
சகல போட்டிகளுக்கும் நடுவராக எம்.எஸ்.எம். நௌபி கடமையாற்றினார். சிறந்த வீரராக முஹம்மது ரஜாயும், சிறந்த கோல் காப்பாளராக மிஷ்ராபும் தெரிவாகினர்.
 .
நிகழ்வுக்கு பூரண அனுசரனையை ஜவாத் ஸ்ரிக்கர்ஸ் நிறுவன உரிமையாளர் ஏ.ஆர்.எம். ஜவாத் வழங்கி இருந்தார்.
 .
குறிப்பு:
சம்பியன் ரெட் அணி சிவப்பு நிற அங்கி.
இரண்டாம் இடம் வைட் அணி வெள்ளை நிற அங்கி.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All