புத்தளம் போல்ஸ் வீதியில் சகல வசதிகளுடனும் கூடிய பாடசாலையாக நிர்மாணிக்கப்பட்டு 2019.02.21 ஆம் திகதி அப்போதைய வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ பேஸல ஜயரத்ன பண்டார அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஈராண்டு நிறைவை இன்று (2021.02.22) ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரி கொண்டாடியது.
இதன் போது பாடசாலை மாணவர்களினால் காலைக் கூட்டத்தின் போது ஞாபகமூட்டல் நிகழ்வு இடம் பெற்றது.
2009.11.21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி, புத்தளம் சாஹிரா தேசியப் பாடசாலையின் மாணவர் விடுதியில் ஒன்பது வருடங்களாக இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
WAK
Share the post "புதிய வளாகத்தின் இரண்டாம் ஆண்டு பூர்த்தியை கொண்டாடியது விஞ்ஞான கல்லூரி"