அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி பெற்றுக்கொண்டு இலங்கைக்கு வருகை தரும் நபர்களுக்கு இனிமேல் தனிமைப்படுத்தல் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாமல் வருகை தரும் நபர்களுக்கு விடுதி தனிமைப்படுத்தல் என்றால் 7 நாட்கள் விடுதியிலும், 7 நாட்கள் வீட்டிலும் தனிமைப்படுத்தல் இருக்க வேண்டும் எனவும், அரசாங்க நிலையமென்றால் 10 நாட்கள் நிலையத்திலும், 4 நாட்கள் வீட்டிலும் தனிமைப்படுத்தல் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
WAK
Share the post "வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு இனி தனிமைப்படுத்தல் இல்லை"