Puttalam Online
regional-news

கொழும்பு முகத்திடலில் சுற்றுச்சூழலலை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

  • 23 March 2021
  • 154 views

Sri Lanka Unites அமைப்பினால் சுற்றுச்சூழல் நீதி மற்றும் விழிப்புணர்வு எனும் தொனிப்பொருளில் தேசிய ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுச்சூழலலை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று புத்தளம் கொழும்பு முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது Sri Lanka Unites அமைப்பின் தன்னார்வலர்களால் கொழும்பு முகத்திடல் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டதோடு சேகரிக்கப்பட்ட கழிவுகள் வகைப்படுத்தப்பட்டு புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நகர பிதா கே.ஏ. பாயிஸ், நிர்வாக அதிகாரி சுஜித் ஜெயசுந்தர, சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஜே.எம். ஜெஸ்லீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All