முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் ஏற்புடமை பற்றியூம் அதில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது பற்றியூம் நாட்டில் பலரும் சாதக பாதகமாக கருத்துக்களை வெளியிடும் சந்தர்ப்பத்தில் ‘சேன்ஜ்’ மனிதாபிமான நிறுவனம் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் கீழ் அமைந்துள்ள காதி நீதிமன்றங்களின் நடவடிக்கைகளை ஆதாரமாகக்கொண்ட “INSIDE THE QUAZI COURTS OF SRI LANKA” எனும் தொனிப்பொருளில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.
.
இவ்வெளியீட்டு வைபவமானது கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், கல்விமான்கள், அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நலன் விரும்பிகள் போன்ற பலர் கலந்து கொண்டனர்.
.
இவ் ஆய்வறிக்கையின் பிரதிகள் மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்டதுடன் இந்நிகழ்விற்கு வருகைதந்த பிரமுகர்களுக்கும் வழங்கப்பட்டதுடன் மேற்சொன்ன இவ் ஆய்வறிக்கையில் அடங்கியூள்ள பரிந்துரைகளை அரச தரப்பில் தீர்மானம் மேற்கொள்ளும் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரும்படியும் வேண்டிக்கொள்ளப்பட்டது.
.
WAK
Share the post "‘Change’ நிறுவனத்தினால் ஆய்வறிக்கை வெளியீட்டு வைப்பு"