Puttalam Online
regional-news

பாடத்திட்டத்தில் திருத்தி அமைக்கப்படவுள்ள சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடல்

  • 5 April 2021
  • 106 views

(ரூஸி சனூன் புத்தளம்)
.
2023 ஆம்
ஆண்டளவில் இலங்கை கல்வி பாடத்திட்டத்தில் திருத்தி அமைக்கப்படவுள்ள அழகியற் கலை பாடத்துகுறிய புதிய கல்வி பாடத்திட்டத்தை அமைப்பதற்கான விசேட கலந்துரையாடலொன்று  அண்மையில் தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
.
பாடத்திட்டத்தினை திருத்தி அமைப்பதற்காக தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கல்வி அமைச்சின் அழகியற்கலை பாடத்துக்கான கல்வி பணிப்பாளர், தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி பணிப்பாளர், அழகியற்கலை, சித்திரம், நடனம் மற்றும் இசை போன்ற பாடத்துக்கான விரிவுரையாளர்கள் பலர் கலந்து கொண்டு புதிய சீர்திருத்தம் தொடர்பாக கலந்துரையாடினர்.
 .
ஆரம்பத்தில் மாவட்ட மட்டத்தில் இதனை பரீட்சிப்பதற்கான ஆலோசனைகளும் இதன் போது முன்வைக்கப்பட்டன.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All