Puttalam Online
current

புத்தளத்தில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்குமான முக்கிய அறிவித்தல்

  • 26 June 2021
  • 739 views

புத்தளத்தில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்குமான முக்கிய இந்த அறிவித்தலை புத்தளம் பெரியப்பள்ளி, ஜம்மிய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை, அரசியல் தலைமைகள், மற்றும் புத்தளம் பொது சுகாதார உத்தியோகத்தர்கள் இணைந்து விடுக்கின்றனர்.
.
இலங்கையின் எப்பாகத்திலும் இல்லாதவாறு, இன்று கொரோனாவின் தாக்கம் புத்தளத்தில் அதிகரித்துள்ளது. ஆச்சரியப்படும் வகையில் 100 க்கு 21 பேர் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக நேற்றைய தினம் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
.
குறித்த வட்டாரங்களில் குறிப்பிட்ட பகுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கைகழுவல், சமூக இடைவெளி பேணுதல் போன்ற அடிப்படை அம்சங்களுக்கு அப்பால்  பொதுமக்கள், பின்வரும் 4 விடயங்களில் மிக அவதானமாக செயல்பட்டு பாரிய உயிர்சேதத்தில் இருந்து உங்களையும், ஊரையும் பாதுகாக்க உதவுமாறு வேண்டிக்கொள்ளப் படுகின்றீர்கள்.
.
1. உங்களுக்கு தொண்டை நோவு, மூச்சுத்திணறல், காய்ச்சல் போன்ற ஏதேனும் நோய் அறிகுறி ஏற்பட்டால், எக்காரணம் கொண்டும் இறுதி கட்டம் வரை வீட்டில் தாமதிக்காது உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்.
இதுவே அதிக மரணங்களுக்கு காரணமாக இருக்கின்றது.
.
2. இளைஞர்களே நோய் பரவலின் மிக முக்கிய காரணியாக கண்டறியப்பட்டுள்ளீர்கள். குறிப்பாக வெளியில் சென்று நோயை காவி வந்து, வீட்டிலுள்ள வயோதிபர்களுக்கும் ஏனையோருக்கும் உங்களை அறியாமலேயே நீங்கள் வழங்கும் ஒரு கொலைக்கு நிகரான செயலை செய்துவருகிறீர்கள். இதனை இளைஞர்கள் முற்றாக தவிர்ந்து கட்டுப்பாடுகளுடன் நடந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றீர்கள்.
.
3. தடுப்பூசி பற்றிய அறியாமை, வதந்திகள் மற்றும் மூட நம்பிக்கைகளை கைவிட்டு, சந்தர்ப்பம் கிடைக்கும்போது உடனடியாக தடுப்பூசியை பெற்றுக்கொள்வதை முற்படுத்துங்கள்.
.
4. பிழையாக Mask அணியும் அறிவீனம். நோயின் பரவலை பலமடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக அடுத்தவருடன் பேசும்போது கட்டாயம் மூடவேண்டிய முகத்தை பேசும் போது மட்டும் தளர்த்திவிட்டு பேசுவது Mask இன் நோக்கத்திற்கே முரணானதாகும். எனவே Mask ஐ எப்போதும் உரிய முறையில் தாழ்த்தாது அணியுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றீர்கள்.
.
மேலும் இந்த அவசர பிரகடனத்தை அறிவுபூர்வமாக உணர்ந்து கூடுதல், கலைதல், கூடி நின்று கதைத்தல்,
விளையாடுதல், வீதிகளில் சுற்றித்திரிதல், குடும்பம், நண்பர்கள், பொழுதுபோக்கு என வீட்டுக்கு வீடு விஜயம் செய்தல் போன்ற அனைத்தையும் நிறுத்துங்கள்.
.
கட்டுப்பாடுகளை மீறுவோர் உங்களை மட்டுமல்ல உங்கள் உடன்பிறப்புகள், உங்கள் பெற்றோர், உங்கள் குழந்தைகள் ஏன் இந்த ஊரையே அழிக்கின்றீர்கள்.
.
மேலும் இப்பாவத்திற்காக இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் தண்டிக்கப்படவிருக்கின்றீர்கள் என்பது மார்க்கத்தின் நிலைப்பாடாகும். எனவே, இந்த அமானத்தை அலட்சியம் செய்யாது உணர்ந்து நடந்துகொள்ளுமாறு மீண்டும் மீண்டும் தயவாய் வேண்டிக்கொள்கிறோம்.
 .
இவ்வண்ணம்.
புத்தளம் பெரியப்பள்ளி,
ஜம்மிய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை
அரசியல் தலைமைகள், மற்றும் புத்தளம் பொது சுகாதார உத்தியோகத்தர்கள்/ திணைக்களம்.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All