Puttalam Online
regional-news

கண்டக்குளி விவசாயிகளின் மின்சாரப்பற்றாக்குறைக்கு தீர்வு

  • 26 June 2021
  • 404 views

கற்பிட்டி-கண்டக்குளி வெள்ளங்கரை பாதையில் மின்மாற்றி (Transformer) ஒன்று பெற்றுக்கொடுக்கப்பட்டு அதனூடாக மின்சாரம் வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.

கற்பிட்டி-கண்டக்குழி ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன அமைப்பாளர் ஜனாப் அஹ்சான் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, முன்னால் மாகாண சபை உறுப்பினரும்,கெளரவ அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா அவர்களின் இணைப்புச் செயலாளரும், புத்தளம் மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளரும், புத்தளம் தொகுதி இணை அமைப்பாளருமான அல்ஹாஜ் AHM.ரியாஸ் அவர்களின் முயற்சியினால் இச்செயற்பாடு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

வெள்ளங்கரை பாதையில் மின்மாற்றி இல்லாததால் ஏற்பட்டு வந்த மின்சாரப் பற்றாக்குறையால் அதிகமாக விவசாயிகளே பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தனர். இந்தப் பிரதேச மக்களின் பிரச்சினையை இலங்கை மின்சார சபைக்கு கடிதம் மூலம் அறிவித்த கெளரவ அமைப்பாளரின் கடிதத்திற்கான பதிலை அனுப்பிய இலங்கை மின்சார சபை, மின்மாற்றி ஒன்றினை வழங்கி மின்சாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைகளையும் ஆரம்பித்தது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All