Puttalam Online
regional-news

மூன்றாவது அகவையில் ‘Mission Green Sri Lanka’ அமைப்பு

  • 11 September 2021
  • 199 views

பச்சைப் பயணம்…
இது சில இளைஞர்களின் கதை…!
——-

இத்தேசத்தை
பச்சைப்படுத்தும் முயற்சியில் சில இளைஞர்கள்…

எல்லோரும் வெட்டுகிறார்கள்….
இவர்கள் நட்டுகிறார்கள்…!

எல்லோரும் அறுக்கிறார்கள்… இவர்கள் வளர்க்கிறார்கள்…!

எங்கோ ஒரு மூலையில்…
ஏதேனும் சில மரங்களை ஊன்றிக்கொண்டே நடக்கிறார்கள்…

கண்காணும் அழுக்குகளை
அகற்றிக்கொண்டே நகர்கிறார்கள்….

நதிகளும் காடும்…. பறவைகளின் கீதமும்…
பசுமையும் நிறைந்த தேசம்… இவர்களின் அகண்ட கனவு…!!

###

Mission Green Srilanka..!

இது சில இளைஞர்களின் கதை…
புத்தளத்தில் பிறந்த ஒரு புத்தாக்க நிறுவனத்தின் கதை…

எல்லோரும் இயற்கை வளம் பற்றி காற்றில் கதைத்துக்கொண்டிருந்தபோது…
இவர்களோ அதனை செய்துகாட்டப் புறப்பட்டார்கள்…

வில்பத்து அழிவுபற்றி, விவாதஅரசியல் நடத்திக்கொண்டிருந்தபோது…
இரண்டு விதைகளைத் தூவி தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார்கள்…

இவர்கள்…
நடைமுறைச் சகோதரர்கள்…!

கடல்களில் இறங்கி
கழிவுகளை பொறுக்கினார்கள்…

இயற்கையின் சிந்தனையை…
இளைய இதயங்களில் கொட்டினார்கள்…

இதுவரை… இவர் கரங்கள்… கடலிலிருந்து…
ஆயிரம் kg “பிளார்த்திக்கை” அப்புறப்படுத்தியிருக்கிறது…

3500 புதிய மரங்களை,
பூமிக்குப் பரிசளித்திருக்கிறது…

குப்பை கொட்ட நினைத்த நிலத்தில்…
இந்த தங்கம் முளைத்திருக்கிறது…

###

கழிவும் விஷமும்…
கப்பல் கணக்கில் கடலில் கலக்கும் காலத்தில்…

காட்டை அழித்து…
கழிவுகளை புதைத்து… காசுபார்க்க விளையும்
மனிதர்களுக்கு மத்தியில்…

மின்சாரம் எடுக்க…
புகையை குடித்துக்கொண்டிருக்கும்…
ஒரு generation இல்…

இந்த Mission ஐ
இளைஞர்கள் சுமந்திருப்பது… இத்தேசம் செய்த பாக்கியம்…

###

இனம் மதம் மொழி கடந்து…

இந்த நிறுவனம்,
இன்னும் அறியப்படவேண்டும்…

இயற்கையை நேசிக்கும் ஒவ்வொரு உயிரும்…
இதிலே இணைந்துகொள்ளவேண்டும்…

MGSL இன் வேர்கள்… புத்தளம் தாண்டி
பூமிக்குள் இறங்க வேண்டும்…

பல்லாயிரம் இளைஞர்களைக்கொண்ட
பசுமை இயக்கமாய்…
இந்த நாட்டில் பரிணமிக்க வேண்டும்…

###

2019 September 04 முதல்…
உங்கள் பயணத்தை அவதானித்து வருகிறேன்…

துடிப்புள்ள உங்கள் நகர்வுகளை…
ஒரு ஆலோசனை சபை அங்கத்தவனாய்… நேசித்துவருகிறேன்….

நீங்கள் நிச்சயம் வெல்வீர்கள்….
இத்தேசத்தில் கொண்டாடப்படுவீர்கள்…

சர்வதேசத்தில்…
இயற்கை அரணின் அடையாளமாய்…
ஒரு நாள் பேசப்படுவீர்ர்கள்…!

###

இதயமுள்ள இளைஞர்களே…
ஒரு call எடுங்கள்…

“நானும் எப்படி இணைந்துகொள்வது..?”
நட்புடன் கேளுங்கள்…

பச்சை பசுமையாய்….
உங்களுக்கு ஒரு பயணம் கிடைக்கும்…

மலரோடும்… மலையோடும்… மரங்களோடும்…
கடலோடும்… காடுகளோடும்…
ஒரு நட்பு ஏற்படும்…

நீங்கள் உயிர் பிரிந்து செல்லும்போது…
ஒரு சுத்தமான பூமி புன்னகைக்கும்…

உங்களால் உருவாக்கப்பட்ட 1000 மரங்கள்…
அடுத்த சந்ததிக்கு ஆக்ஸிஜனை வழங்கிக்கொண்டிருக்கும்…!

—-
புத்தளம் மரிக்கார்.
MGSL – ஆலோசனை சபை.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All