Puttalam Online
regional-news

புத்தளத்தின் முக்கிய தலைமைகளுடனான சந்திப்பில் ‘Youth Vision’ அமைப்பு

  • 11 September 2021
  • 271 views

(Youth Vision Media)

புத்தளம் முகம் கொடுத்துள்ள கொடிய Covid19 தாக்கம் பற்றிய சிறு கலந்துரையாடலை ஊரின் முக்கிய தலைமைகளுடன் நேற்று முன்தினம் (09.09.2021) Youth Vision அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த வகையில், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுடனான கலந்துரையாடல் அவர்களின் காரியாலயத்திலும், அதேபோல் கௌரவ நகர பிதா MSM ரபீக் அவர்களுடனான கலந்துரையாடல் நகர சபை காரியாலயத்திலும் நடைபெற்றது.

தற்பொழுது புத்தளம் எதிர் கொண்டுள்ள Covid19 தாக்கம், தடுப்பூசி ஏற்றுதலில் பொது மக்களுக்கான சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தலின் முக்கியத்துவம், தடுப்பூசியை சிரமமற்ற இலகுவான முறையில் பெற்றுக்கொள்ள ஒரு வழி முறையை ஏற்படுத்தல் போன்ற முக்கிய விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மற்றும் கௌரவ நகர சபை தலைவர் MSM ரபீக் ஆகியோருடனான இந்த கலந்துரையாடல் இனிதாய் இடம் பெற்றதுடன் இருவருமே ஊரின் நலன் கருதி இந்த விடயங்களில் தம்மாலான பங்களிப்புகளை எந்நேரமும் தர தயாராக இருப்பதாக கூறியதோடு, சமூக சார்ந்த விடயங்களில் இவ்வாறான அமைப்புகள் ஈடுபடுவதை வரவேற்பதாகவும் கூறினர்.

தமது பொன்னான நேரங்களை இந்த ஒன்று கூடலுக்கென ஒதுக்கி தந்த எமது இரு தலைமைகளுக்கும் Youth Vision சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஏற்கனவே, தொலைப்பேசி ஊடாக பிரதேச செயலகருடனும், புத்தளம் பொது சுகாதார பரிசோதகர் திரு சுரேஷ் அவர்களுடனும் கலந்துரையாடப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

இவ்வாறு அனைத்து தலைமைகளின் ஆலோசனைகளையும் பெற்று இக்கொடிய தொற்றிலிருந்து அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எம் அனைவரின் நோக்கமாகும்.

எமது இந்த முயற்சியையும் நோக்கத்தையும் இறைவன் பொருந்திக் கொள்வானாக! ஆமீன்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All