Puttalam Online
regional-news

மணல்குன்று தும்புத் தொழிற்சாலை துப்பரவு செய்யப்பட்டது

  • 12 September 2021
  • 239 views

புத்தளம் மணல்குன்று தும்புத் தொழிற்சாலை வளாகம் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்களின் விஷேட பணிப்புரையின் பேரில் நேற்றுமுன்தினம் (10) துப்பரவு செய்யப்பட்டது.
 .
குறித்த வளாகம் நீண்ட காலமாக கைவிடப்பட்ட நிலையிலுள்ளதால் புதர் மண்டி பற்றைக் காடாய்க் காட்சியளித்ததுடன் அப்பகுதி சமூகவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் கிடைத்த மக்களின்முறைப்பாட்டினையும் கருத்திற் கொண்ட நகரபிதா இந்நடவடிக்கையை மேற்கொண்டார்.
 .
மேலும் நகரபிதா குறித்த தொழிற்சாலைப் பகுதியை புனரமைத்து எதிர்காலத்தில் போதைவஸ்து பாவனையாளர்களை மீட்கும் புனர்வாழ்வு மையமாக அதனை மாற்றவுள்ளதாகவும் தெரிவித்தார்.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All