Puttalam Online
regional-news

அல்ஜித்தா பாலத்திற்கான பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

  • 20 September 2021
  • 314 views

(Media Unit)
 .
நீண்ட காலமாக தில்லையடி மக்கள் மழைக்காலங்களில் எதிர்நோக்கி வந்த, வெள்ள நீர் வடிந்தோடாமைக்கு காரணமான அல்ஜித்தா பாலம் சீரற்ற நிலை குறித்து ஊர் மக்கள் புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அலி சப்ரி ரஹீம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதனை அடுத்து இப்பாலத்தை புணரமைக்க சுமார் 1 கோடியே 35 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.
 .
9.5m நீளமும் 5.5m அகலமும் கொண்ட இப்பாலத்தை புனரமைக்கும் முகமாக நேற்று (19) அடிக்கல் நாட்டும் வைபவம் மிக சிறப்பாக தில்லையடியில் இடம் பெற்றது .
 .
குறித்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் ”அரசியல் என்பது எனது தொழில் அல்ல அது ஒரு சமூகப்பணி , தில்லையடி மக்கள் எனது வெற்றிக்கு மிகவும் துணை நின்றவர்கள், இப்பிரதேசத்திற்கு தேவையான அனைத்து அபிவிருத்திகளையும் முடிந்தளவு கொண்டுவருவேன்” என்று தெரிவித்தார்.
 .
இந்நிகழ்வில் ஆளும் அரசாங்கத்தின் புத்தளம் மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஏ.எச்.எம் ரியாஸ் மற்றும் RDA அதிகாரிகள், நகர சபை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினரின் தில்லையடி அமைப்பாளருமான திரு நகுலன், பள்ளி பரிபாலன சபை தலைவர் திரு அநூர்தீன், செயலாளர் மலிக் மௌலவி, யாழ்மாவட்ட மக்களின் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஆசிரியர் அமீர் அலி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் தில்லையடி கிளை உறுப்பினர்கள் மற்றும் சதாமியாபுரம் கிளை தலைவர் சுக்ரி, செயலாளர் மஜீத் தில்லையடி ஜனாசா சங்கத்தலைவர் ஹினான்,ஜிப்ரி உட்பட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அலி சப்ரி ரஹீம் அவர்களின் பிரத்தியேக செயலாளர் திரு ஜவ்சி ஜமாலுதீன் மற்றும் மக்கள் தொடர்பாடல் அதிகாரி திரு முராத் , பாராளுமன்ற உறுப்பினரின் புத்தளம் மாவட்ட இணைப்பு அதிகாரி M.I.M நவாஸ், அன்சாரி பாடசாலை அதிபர் மற்றும் உலமாக்கள் , ஆதரவாளர்கள், ஊர்மக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
 .
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All