Puttalam Online
regional-news

மூன்று மாடிக்கட்டிடம் உத்தியோகபூர்வமாக அதிபரிடம் கையளிப்பு

  • 28 September 2021

கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அழகிய புதிய மூன்று மாடிக்கட்டிடமான மர்ஹூம் தம்பி நெய்னா மரிக்கார் மூன்று மாடிக்கட்டிடம் இன்று (28/09/2021) உத்தியோகபூர்வமாக கட்டிட நிர்மானப்பணியாளர்களினால் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அதிபர் ரோஸ் புகாரி அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
.
2018ம் ஆண்டில் இக்கட்டிடத்திற்கான ஆரம்ப வேலைகள் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் பெரும் பங்களிப்புடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. இந்நிகழ்வில் உப அதிபர் ,பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையின் கல்வியை சாரா ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
.
இந்த மூன்று மாடிக்கட்டிடம் சுமார் 6.5 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சுவடிக்கூடம்View All