20 வயதிற்கு மேற்பட்டோருக்கான முதலாவது தடுப்பூசி வழங்கும் செயல்திட்டம் நேற்று (29.09.2021) வியாழக்கிழமை காலை எட்டு மணி முதல் புத்தளம் ஸாஹிரா மற்றும் பாத்திமா பாடசாலைகளில் நடைபெற்றது.
மரிக்கார் வீதி, மணல்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளிபுரம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் உள்ளவர்களுக்கு ஸாஹிரா தேசிய பாடசாலையிலும், புத்தளம் கிழக்கு, புத்தளம் வடக்கு, பழைய ஜூம்ஆ பள்ளி மற்றும் பெரிய பள்ளி குடியிருப்பு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்குட்பட்டவர்களுக்கு பாத்திமா மகளிர் கல்லூரியிலும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், புத்தளம் பிரதேச செயலகம் ஆகியவற்றுடன் இணைந்து வழமை போன்று நகரசபையின் பூரண ஒத்துழைப்போடு இப்பணிகள் நடைபெற்றன.
Youth Vision அமைப்பினர் வழமைப்போன்று தடுப்பூசி பெற வருவோரின் விபரங்களை தொழில்நுட்ப ரீதியாக ஆவணப்படுத்தல் மற்றும் மேலதிக வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதேநேரம் Zycon அமைப்பினரும் இத்தடுப்பூசி திட்டத்தில் தங்களின் பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
WAK