Vision for Society எனும் தொனிப் பொருளில் இயங்கி வரும் ஸாஹிராவின் பழைய மாணவர் அமைப்பான Youth Vision அமைப்பினர், புத்தளம் ஜனாஸா நலன்புரி சங்கத்தினரால் கொள்வனவு செய்யப்பட்ட ஜனாஸா வாகனத்திற்கான காசோலையை கையளிக்கும் நிகழ்வு அண்மையில் (08.10.2021) நடைபெற்றது.
புத்தளம் ஜனாஸா நலன்புரி சங்கத்தின் தலைவர் அஷ்ஷெய்கு மின்ஹாஜ் (இஸ்லாஹி) அவர்களிடம் 105,290.00 ரூபா பெறுமதியான காசோலையை Youth Vision நிர்வாகக் குழுவினர் கையளித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்!
இந்த நற்காரியத்திற்காக உடலால் பொருளால் எண்ணத்தால் தமது பங்களிப்புகளை தந்துதவிய எமது Youth Vision அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் இதுபோல் உதவிக்கரம் நீட்டிய ஏனைய அமைப்பினரின் பொருளாதாரத்திலும் வாழ்வாதாரத்திலும் இறைவன் மென்மேலும் அபிவிருத்தியை கொடுக்க வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றோம்.
‘யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.’
(அல்குர்ஆன் : 2:274)
WAK