Puttalam Online
regional-news

புத்தளம் நகரசபையால் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு செயற்திட்டம்

  • 13 October 2021

வருமுன் காப்போம் திட்டத்திற்கமைய புத்தளம் நகரசபையால் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் நகரசபை எல்லைக்குள் முதற்கட்டமாக கடந்த வாரம் 5ம் வட்டாரத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
.
பருவ மழை காலம் ஆரம்பித்துள்ளதால், டெங்கு பரவும் அபாயம் ஏற்படக்கூடிய நிலைமையைக் கருத்திற்கொண்டு புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்களின் வழிகாட்டலில் புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துடன் இணைந்து மேற்படி செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
.
இதன்போது நுளம்புகள் பெருகும் இடங்களை நகரசபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள் இனங்கண்டு உரிய அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
.
நாளை14-10-2021 வியாழக்கிழமை 6ம்,7ம் வட்டாரங்களில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு செயற்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
.
தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு புத்தளம் நகரசபையால் புத்தளம் சுகாதார வைத்தியஅதிகாரி பணிமனையுடன் இணைந்து புத்தளம் சுற்றாடல் பிரிவு பொலிசாரின் ஒத்துழைப்புடன் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
.
எனவே நாம் அனைவரும் இணைந்து எமது வீட்டு சூழலில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை இனங்கண்டு அவற்றை அழித்து சுற்றுச் சூழலை சுத்தமாக வைப்பதில் பங்களிப்புச் செய்வதோடு வருகை தரும் உத்தியோகத்தர்களுக்கும் உங்களால் இயன்ற ஒத்துழைப்பை வழங்குமாறு புத்தளம் நகரசபை வேண்டுகோள் விடுக்கின்றது.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சுவடிக்கூடம்View All