Puttalam Online
regional-news

வரலாற்று சாதனை புரிந்தது பள்ளிவாசல்துறை பாடசாலை

  • 25 October 2021

(Farook Fatheen)

பாடசாலை வரலாற்றில் மிகப் பெரிய சாதனையை புரிந்தது மட்டுமல்லாது புத்தளம் மாவட்டத்திற்கு மகிமையையும் பெற்றுத்தந்துள்ளது கல்/பள்ளிவாசல் துறை முஸ்லிம் மகா வித்தியாலயம்.

ஜெர்மனி ‘Von Berlin’ நிறுவனத்தால் சுற்றாடல் (plastics technic) தொடர்பான ஆய்வில் கல்/பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம் தேசிய ரீதியாக முதலாம் இடத்தைப் பெற்றதன் விளைவாக ஜெர்மனியில் இடம்பெறும் சர்வதேச சுற்றாடல் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப்பெற்று பாடசாலையின் அதிபர் எம்.யூ.எம் உம்மு பரீத்தா அவர்கள் ஜெர்மனி பயணமாகியுள்ளார்.

மாநாட்டில் அதிபருக்கு பாடசாலை சார்பாக சிறப்புப் பேச்சு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும். வெளி உலகுக்கு இப்பாடசாலையின் நாமத்தை எடுத்து செல்ல காரணமாக அமைந்த சுற்றாடல் ஆணையாளர்கள், ஆலோசகர் ஏ.எச்.எம்.எம்.ஷாபி, ஆசிரியர்கள், சுற்றாடல் குழுவினர்கள், பொறுப்பாசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கக் குழுவினர்கள் ஏனைய நல்லுள்ளங்களுக்கும் நன்றியையும் பாரட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post
சுவடிக்கூடம்View All