புத்தளம் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் அதன் இணைத் தலைவர்களான வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் வசந்த கரன்னாகொட, பாராளுமன்ற உறுப்பினர் அசோக பிரியந்த ஆகியோரின் தலைமையில் புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர் அவர்களின் நெறிப்படுத்தலுடன் கௌரவ இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி ரஹீம் ,சிந்தக மாயாதுன்னே ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
இதில் வடமேல் மாகாண தலைமை செயலாளர் ,புத்தளம் மாவட்ட சகல பிரதேச செயலாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது “கரைத்தீவு, உடப்பு, கொத்தான்தீவு போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கிராமிய வைத்தியசாலை வைத்தியர்கள் இன்மையால் மூடப்பட்டுள்ளது என்றும் இதனால் மக்கள் கஷ்டங்களுக்கு உள்ளாவதாகவும் அடிக்கடி அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் பாதையில் இறங்கி இவற்றுக்காக ஆர்ப்பாட்டங்களை செய்வதாகும் இதற்கு தீர்வாக உரிய வைத்தியர்களை அந்தந்த கிராமங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அமர்த்தி அம்மக்களின் தேவைகளை தீர்த்துவைக்க உதவ வேண்டும்” என கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் அவர்கள் கோரிக்கையை முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்த மாகாண வைத்திய அதிகாரி கூடிய விரைவில் இந்தக் குறையை நிவர்த்திக்க ஆவண செய்வதாக கூறியமை குறிப்பிடத்தக்கது.
WAK