Puttalam Online
regional-news

KAB ஞாபகார்த்த கிண்ணத்துக்கான உதைப்பந்தாட்டத் தொடர் ஆரம்பம்

  • 19 February 2022

புத்தளம் நகரசபையின் ஏற்பாட்டில் புத்தளம் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஒத்துழைப்புடனும் KAB ஞாபகார்த்த கிண்ணத்துக்கான உதைப்பந்தாட்டத் தொடரின் முதல் போட்டி நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்களின் தலைமையில் புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கில் நேற்று (18) இடம்பெற்றது.
.
விஷேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிந்தக அமல் மாயாதுன்ன கலந்து கொண்டார்.
.
நகரசபை உறுப்பினர் ரனீஸ் பதூர்தீன் போட்டி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தார். நேற்றைய முதல் போட்டியில் போட்டியில் Al Ashraq மற்றும் New Star அணிகள் மோதிக்கொண்டன. இறுதிவரை விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் நிறைவில் 3 : 2 எனும் கோல் வித்தியாயசத்தில் Al Ashraq அணி வெற்றி பெற்றது.
.
இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள் பர்வின் ராஜா ஆரிப் சிஹான் நகரசபை உயரதிகாரிகள் புத்தளம் உதைப்பந்தாட்ட சம்மேளன பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான ரசிகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post
சுவடிக்கூடம்View All