இது புத்தளத்தின் ஆவணக் காப்பகமாகும். எமது பிரதேசத்தின் புராதன புகைப்படங்கள், வெளியீடுகள், துண்டுப் பிரசுரங்கள், நம்முன்னோர் பயன்படுத்திய அரபுத்தமிழ் நூல்கள், பழைய சீட்டுக்கள், மற்றும் பெறுமதிமிக்க ஆவணங்கள் போன்றனவற்றைத் தொடர்ந்தும் நீங்கள் இங்கு பார்வையிடலாம்.
ஆவணப்படுத்தப்படவேண்டிய, எதிர்கால சந்ததியினருக்குத் தேவையாவை என நீங்கள் கருதும் புகைப்படங்கள், ஆவணங்கள் போன்றவை உங்களிடம் இருப்பின் அவற்றை scan செய்து அல்லது புகைப்படம் எடுத்து info@puttalamonline.com அல்லது puttalamonline@yahoo.com என்ற எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். அவ்வாறு அனுப்பும்போது அதற்கான விளக்கக் குறிப்புக்களையும் இணைத்து அனுப்ப மறக்கவேண்டாம். விளக்கங்கள் Unicode இல் Type பண்ணப்படல் வேண்டும்.
இதன்மூலம் அருகிவரும் எமது பழம் பெரும் பொக்கிசங்கள் மின்னாவணப்படுத்தப்படும். அவற்றை நேரடியாக எமக்கு கிடைக்கச் செய்தாலும் நாம் scan செய்துவிட்டு மீள ஒப்படைப்போம்.
இங்கு ஏற்கனவே Post பண்ணப்பட்டிருக்கும் புகைப்படங்கள் உட்பட அனைத்துக்குமான விளங்கங்களும் புதிய தகவல்கள் கிடைக்கும்போது அவ்வப்போது இற்றைப்படுத்தப்பட்டு (Update) வருகின்றன.
புகைப்படங்களுக்கான விளக்கங்களுக்கு அவற்றின்மீது ” கிளிக்” பண்ணவும்.
புத்தளம் பிரதேசத்துடன் தொடர்புள்ள முக்கியமான பழைய கடிதங்கள் , உயில்கள் , ஏடுகள், கையெழுத்துப் பிரதிகள் , துண்டுப் பிரசுரங்கள், கல்வெட்டுக்கள் போன்றவற்றை இத்தலைப்பின் கீழ் காணலாம். உங்களிடமோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களிடமோ இத்தகைய , பேணிப் பாதுக்காக்கப்படவேண்டிய ஆவனங்கள் இருப்பின் குறிப்புக்களுடன் எமக்கு அனுப்பி வையுங்கள்.
16 Photos
புத்தளம் பிரதேசத்தில் வாழ்ந்து மறைந்தவர்களை அவர்களின் பின்னைய சந்ததியினரான குடும்பத்தவர்களும் உறவினர்களும் பிரதேச மக்களும் அறிந்துகொள்வதற்கான களம் இது. இக்களத்தில் காட்சிப்படுத்தப்படுவோர் பிரபலமானவர்களாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. இதற்கான தகவல்களை அனுப்புவோர் நம்முன்னோரின் புகைப்படத்துடன் பெயர், குடும்ப விபரம் ,வேறு விபரங்கள் (ஏதேனும் இருப்பின்) போன்றவற்றை இணைக்கவும். குறிப்பிட்டவர் , வேறு எவருடனும் சேர்ந்து கட்சியளிப்பதாகவோ ஏதேனும் நிகழ்வின்போது காட்சியளிப்பதாகவோகூட புகைப்படங்கள் இருக்கலாம். அவ்வாறான படங்கள் தொடர்பாக மேலதிக விபரங்களைக் குறிப்பிடுவது நன்று.
4 Photos
சிரமமான பல வேலைகளைக் கூட மிக இலகுவாகச் செய்து முடிக்கக்கூடிய வகையில் உபகரணங்களும் தொழினுட்பமும் இன்று வளர்ச்சியடைந்துள்ளன. ஆனால் அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னர் இவ்வாறான வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் , நம்முன்னோர் மிக எளிமையான கருவிகளையோ வெறும் கைகளையோ பயன்படுத்திக் கலை நுட்பம் பொருந்திய உலோக , மர , துணி வேலைப்பாடுகள் , கைப்பணிப் பொருள்கள் போன்றவற்றை ஆக்கியுள்ளனர்.அவ்வாறான கலைப் பொருள்கள் , அவர்களால் நிகழ்த்தப்பட்ட நாடகம் ,கூத்து,களிகம்பு போன்ற ஆற்றுகைக் கலைகள் ( Performing Arts ) போன்றவை தொடர்பான படங்கள் இப்பகுதியில் வெளியிடப்படும். இவ்வாறன படங்கள் உங்களிடமோ உங்களுக்குத் தெரிந்தவர்களிடமோ இருப்பின் puttalamonline வுடன் தொடர்பு கொள்ளவும்
2 Photos

