Puttalam Online
இப்ராகிம் நெய்னா மரைக்கார்.
  • 16 February 2015 1,316 views

ESM முதலாளி குடும்பம் புத்தளத்தில் ஆதிக்கமும் தலைமைத்துவமும் கொண்டவர்களாக விளங்கினர்.
முகம்மது காசிம் மரைக்காரின் மகன் இப்ராகிம் நெய்னா மரைக்கார் ஆவார். அவருடைய மகனுக்கும் முகம்மது காசிம் மரைக்கார் என்றே பெயரிடப்பட்டது. இவர் திருமணம் முடிக்கவில்லை.

இப்ராகிம் நெய்னா மரைக்காருக்கு கொழும்பில் இரண்டாம் குறுக்குத்தெருவில் கொப்பறா வணிகம் இருந்தது. இவரின் தந்தையால் கொழும்பு சம்மான் கோட்டு பள்ளிக்கு ரூபா 20000 பணமும் 8 பாரிய முத்திரைத் தூண்களும் அன்பளிப்பு .செய்யப்பட்டன. அவற்றை இன்றும் காணலாம்.

இப்ராகிம் நெய்னா மரைக்கார், ப. த. ( P.T. ) தம்பி மரைக்காரின் மகளை மணந்தார். இவரின் மகளையே முன்னாள் நிதி அமைச்சர் MHM நெய்னா மரைக்கார் அவர்கள் திருமணம் செய்தார்கள்.

புத்தளத்தில் நொத்தாரிசாக இருந்த இபுராகிம் என்பவரின் வாரிசுகளே ESM (இ செ மு) குடும்பமாகும். இவர்கள் முதலாளிகள் என அழைக்கப்பட்டனர்.இப்ராகிம் நொத்தாரிசால் மீ ஓயாவிலிருந்து விலுக்கை வயல்களுக்கு நீர்பாய்ச்ச வெட்டப்பட்ட அலை இன்றும் ‘நொத்தாரிஸ் அலை’ எனப்படுகிறது.

இக் குடும்பத்தவரான முகம்மது காசிம் மரைக்கார் மத்ரசதுல் காசிமிய்யா கட்டுவதற்கு நிலம் அன்பளிப்பு செய்ததுடன் கட்டிடங்களையும் கட்டி பராமரிப்புக்கென தென்னந் தோப்புக்களையும் வழங்கினார்.

ஐதுரூஸ் மரைக்கார் என்பவர் புதுப்பள்ளியை (ஐதுரூஸ் பள்ளி) கட்டி வக்ப் செய்தார்.


சுவடிக்கூடம்View All
Recent Post