Puttalam Online
பக்கிக் கரத்தை.
  • 15 February 2015 1,086 views

பக்கிக் கரத்தை

புத்தளம் பிரதேசத்தில் குறுந் தூரப் பயணங்களுக்காக இன்று முச்சக்கர வண்டிகள் பெற்றுள்ள இடத்தை சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் \’ பக்கிக் கரத்தை \’ ( Bakki Karaththai ) அல்லது \’ கூடாரக் கரத்தை \’ என்று அழைக்கப்பட்ட மாட்டு வண்டிகள் பிடித்திருந்தன. சொகுசாகப் பயணம் செய்வதற்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட இவ்வண்டிகளில் பெரும்பாலும் பெண்களே பயணம் செய்தனர். இதற்கென திரைகளும் வண்டியில் போடப்பட்டிருக்கும்.

வாடகை வண்டிகளாக இவை செலுத்தப்பட்டன. சில தனவந்தர்கள் தமது குடும்பப் பயன்பாட்டுக்காக சொந்த வண்டிகளையும் வைத்திருந்தனர். இவற்றுள் ஒன்றைக்கூட இப்போது காண முடியாது.

இலங்கையில் பல்வேறு இடங்களில் சிங்கள மக்களும் பக்கிக் கரத்தைகளைப் பயன்படுத்தினர். அவர்களில் சிலர் இன்றும் இவற்றைப் பொக்கிஷமாகப் பேணிப் பாதுகாத்து வருவதைக் காண முடியும் .

ஆனால் புத்தளத்தின் சிதைந்து போன சிறப்புகளில் பக்கிக் கரத்தையும் சேர்ந்துவிட்டது.

1964 ம் ஆண்டு புத்தளத்தில் மாணவிகளும் ஆசிரியைகளும் பக்கிக் கரத்தையில் பாடசாலைக்குச்
சமுகமளித்த வேளையில் எடுக்கப்பட்ட அரிய படம் இது.

bakki karathai.put

புகைப்பட உதவி: Anaz Mohideen Ayesha Rilah

Upload Date : 2014-01-11

Captured Date : Unknown


சுவடிக்கூடம்View All
Recent Post