Puttalam Online
பள்ளிவாசல்துறை தர்ஹா.
  • 15 February 2015 1,323 views

பள்ளிவாசல்துறையில் அமைந்துள்ள தர்ஹா புகழ் பெற்றதாகும்.இங்கு கூடு எடுக்கும் வைபவங்கள் நடைபெற்றுள்ளன. சுமார் 400 வருடங்களுக்கு முன்னர் இக் கிராமத்துக்கு செய்கு அலாவுத்தீன் ஒலியுல்லாஹ் வந்துள்ளதாகவும் சமயப் பணிகளில் ஈடுபட்டதாகவும் ஊர் மக்கள் கருதுகின்றனர். அன்னார் இறையடி எய்தியதன் பின்னர் மக்கள் அவரது நினைவாக ஒரு கபுருஸ்தானத்தை அமைத்து நினைவு கூரத்தொடங்கினர்.

இந்த தர்காவில் இரு கபுருஸ்தானங்கள் அருகருகே அமைந்துள்ளன செய்து ஹாஜா மற்றும் செய்ஹு அலாவுதீன் ஆகியோருடையதே இவை என நம்பப்படுகின்றது. இந்தியாவில் தமிழ் நாட்டில் மதுரை ஈரோடு ஏர்வாடி உட்படப் பல இடங்களிலும் இலங்கையின் பல பாகங்களிலும் செய்ஹு அலாவுதீன் அவர்களின் தர்ஹாக்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

dharha palliwasalthurai 1.put
FOTOS: Z.A Zanhir


சுவடிக்கூடம்View All
Recent Post