Puttalam Online
புத்தளம் மீனவர்களின் புராதன கலங்க‌ரை விளக்கு.
  • 10 February 2017 2,874 views

Newton Isaac

எங்கோ உள்ள ஒரு ஆலயம் என்று நீங்கள் நினைத்தால் அதற்காக நாம் என்ன செய்யலாம்? நம்மைச் சுற்றி என்னென்ன, எங்கெங்கு இருக்கிறது என்று அவதானத்தைச் செலுத்தும் கெட்ட பழக்கம் எல்லாம் நம்மில் பலரிடம் இல்லையே. எங்கேயோ கண்டது போலாவது இருக்கிறதா? நமது நகரத்து சிறுவர் பூங்காவில்தான் இது கடந்த சில ஆண்டுகளாக நின்று தவஞ் செய்கிறது.

Sentimental Value என்பதன் அர்தத்தை நம்மவர்களால் புரிந்து கொள்ள முடியுமானால் இந்த அரும் பொருள் இப்படி நட்ட நடு சிறவர் பூங்காவில் வெய்யிலில் சுடுபட்டு, மழையில் நனைந்து உப்புக் காற்றால் உருக்குலைக்கப்பட்டு தண்டனை அனபவிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒரு காட்சிப் பொருளாக ஒரு கௌரவமான இடத்தில் தான் கொலுவீற்றிருக்க வேண்டும்.

இதை நான் நேற்று படம்பிடிக்க முயன்றபோது ”வாப்பா இது என்ன?” என்று ஒரு பிள்ளை தன் வாப்பாவிடம் கேட்டபோது பதில் சொல்ல முடியாமல் அந்த வாப்பா தடுமாறியதையும் உணர்ந்தேன். இது எனது தேடல்களில் ஒன்று.

இதன் பெயர் Marine Lentern. அந்தக் காலத்து கப்பல்களில் பாவிக்கப்பட்டது. மார்கோ போலோ கூட இதே மாதிரியான ஒரு கலங்க‌ரை விளக்கைத்தான் அந்த நாட்களிலே பாவித்துள்ளார். முழுக்க முழுக்க பித்தளை, செம்பு உலோகங்களால் தயாரிக்கப்பட்டது.
இதற்கென ஒரு வரலாறு உள்ளது. நமது நீல ஏரிக் கரையில் அந்த நாட்களில் இருந்த பொது கழிவறையின் கூரையில் பல தலை முறை காலமாக நித்தம் தவஞ் செய்து நமது மீனவர்களுக்கு கலங்கரை விளக்குச் சேவையை வழங்கிய விளக்கு இது.

நாற்றமடித்துக் கிடந்த பொது கழிவறை ஒன்றை இடித்துள் தள்ளிவிட்டு அந்த இடத்திலே கடற்கரை பொது நூலகம் (Lake Library) ஒன்றை அமைப்பதன் மூலம் உலகிலே எந்தக் காலத்திலும் செய்யப்படாத ஒரு வேலையைச் செய்த பெருமை முன்னாள் நகர பிதா பாயிஸுக்குத்தான் சேரும் என்றால் பலருக்கு அது சீரணித்துக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் கசப்பானாலும் அதுதான் யதார்த்தம். ஒரு உலக சாதனையாக நான் காண்கிறேன்.

காலா காலமாக ஏரிக் கரையில் கலங்க‌ரை விளக்கமாக நின்ற இந்த விளக்கு நின்ற பொது கழிவறையை பொது நூலகம் அமைப்பதற்காக இடித்துத் தள்ளிய முன்னாள் நகர பிதா பாயிஸ் இந்த விளக்கை நகர சபை களஞ்சிய சாலையில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

அன்று முதல் பல வருடங்களாக நகர சபை களஞ்சிய சாலையில் அஞ்ஞாத வாசம் செய்த இந்த விளக்கு பச்சை நிறக் கறை படிந்து காண்பட்டது. யாருமே அதை என்னவென்று அடையாளம் காணவில்லை.

வெகு காலத்தின் பின்னர் இது அங்கிருந்து மீட்டு எடுக்கப்பட்டு, உலோகப் பொருட்கள் ஒப்பனை செய்பவர்கள் மூலம் ஐயாயிரம் ரூபா செலவில் மினுக்கி எடுக்கப்பட்டபோது இங்கு காணப்படும் இரண்டாவது படத்தில் இருப்பது போலத்தான் இருந்தது.

மிகப் பெறுமதியான இந்த நகரத்து புராதன விளக்கை பொது நூலகத்தில் காட்சிப்படுத்ததே முதலில் தீர்மானிக்கப்பட்டது என்றாலும் இப்படி இதை சிறுவர் பூங்காவில் வைத்து மீண்டும் ஒரு கவிரச்சியற்ற பொருளாக நிற்க வைத்தது என்னைப் பொறுத்தவரையில் ஒரு துரதிஸ்டம்தான்.

VAT


சுவடிக்கூடம்View All
Recent Post