Puttalam Online
எஸ். எம் . ஜலால்தீன் மரைக்கார்.
  • 15 February 2015 1,136 views

3-Jalaldeen Maraikar  Puttalam

எஸ். எம் . ஜலால்தீன் மரைக்கார்

புத்தளத்தின் பிரபல உப்புக் கொந்தறாத்துக்காரர் சீ . மீரா சாகிபு மரைக்கார் ( மீசி மரைக்கார் ) அவர்களின் மகன் எஸ். எம் . ஜலால்தீன் மரைக்கார் ஆவார். தந்தையாருக்குப் பின்பு கொந்தராத்துத் தொழிலைச் செய்து வந்தார் . கங்காணிக்குளப் பகுதியின் தலைவராகவும் , மரைக்காரகவும் , கங்காணிக்குளம் பள்ளிவாசல் பரிபாலகராகவும் விளங்கினார் . புத்தளம் நகரசபையின் உறுப்பினராகவுமிருந்தார் . இவரின் இல்லத்திலேயே இவரின் மருமகர் இஸ்மாயில் ஹாஜியாரின் இளமைப்பருவம் மலர்ந்தது . ஜலால்தீன் மரைக்கார் சமூக , மத சேவைகளில் முன்னின்று உழைத்த தலைவர்களில் ஒருவராவார். புத்தளத்தில் பெருவழி ஆற்றுக்கு செல்லும் வைபவம் இவரின் தலைமையில் நடந்து வந்தது. இரண்டாம் நாள் ரேஸ் (ரேஸ் தரவை) கங்காணிக்குளம் மைதானத்தில் ( தற்போது I B M , சந்தை ) இவரின் தலைமையிலேயே இடம்பெற்றது.


சுவடிக்கூடம்View All
Recent Post