Puttalam Online
அசன் நெய்னா மரைக்கார், மகன் ஹனீபா.
  • 15 February 2015 657 views

புத்தளம் இரண்டாம் குறுக்குத் தெருவில் வசித்த தந்தை அசன் நெய்னா மரைக்கார், மகன் ஹனீபா (21.09.1925 – 08.10.2001) ஆகியோரின் புகைப்படங்கள் இவை. (மர்ஹூம் A.N.M ஷாஜஹான் அவர்களின் தந்தையும் மூத்த சகோதரரும்)

AMM ஹனீபா அவர்கள் களுத்தறை, மட்டக்குழி, உட்பட புத்தளம் பிரதேசத்தில் வட்டக்கண்டல்,இலவன்குளம்,பாலாவி ,போன்ற பலஇடங்களிலும் ஆசிரியராக, அதிபராக பதவி வகித்தவர். சிறந்த சமூக சேவையாளரான இவர் புத்தளம் அகதியா பாடசாலையின் அதிபராக நீண்ட நாட்கள் பணிபுரிந்தவர்.

IFM அமைப்பின் தாபக உறுப்பினரான இவர் புத்தளம் மீலாத் ஷரீப் சொசைட்டியின் செயலாளராகவும் நீண்டகாலம் பணியாற்றியவர். இவரின் முதல் ஆசிரிய நியமனம் களுத்தறை (01.11.1954 – 31.10.1957) ஆகும். அக்காலப் பகுதியின் போது களுத்தறையில் தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது.

Owned by Z.A. ZanhirAsan neina maraikar and haniffa puttalam

Upload Date : 2014-01-11


சுவடிக்கூடம்View All
Recent Post