முன்னைய காலங்களில் வீடுகளில் வானொலிப் பெட்டி இருக்கும். அதனைப் பயன்படுத்த அரசாங்கத்தில் அனுமதிப் பத்திரம் எடுக்கவேண்டும். மேலும் அதனை ஒவ்வரு வருடமும் புத்துப்பிக்கவும் வேண்டும். மேலதிக வானொலிப் பெட்டி ஒன்று வீட்டில் இருக்குமாயின் அது பற்றியும் அறிவிக்க வேண்டும். வீட்டில் வானொலிப் பெட்டி வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் அனுமதிப் பத்திரத்தையும் வைத்திருக்க வேண்டும்..