அசன்குந்தூஸ் பாடசாலையின் பொன்விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது

புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலயத்தின் 50வது வருட நிறைவை முன்னிட்டு சிறப்பு பொன்விழா நிகழ்வுகள் நேற்றைய முன்தினங்களில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றன.

அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் அனைவரினதும் பங்களிப்போடு ஏற்பாடாகியிருந்த இந்நிகழ்வின் முதல்நாள் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலை பிரதான நுழைவாயிலை அவர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

தொடர்ந்து பழைய மாணவர் சங்க ஒத்துழைப்போடு நகரமெங்கும் விழிப்புணர்வு ஊர்வலமும்,
புத்தளம் நகரபிதா கெளரவ MSM ரபீக் உள்ளிட்ட நகர, பிரதேச சபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலோடு கலைக்கலாசார நிகழ்வுகள், விவாத போட்டிகள், முன்னாள் அதிபர்களுக்கான கௌரவிப்பு, கவிஞர்களின் கவியரங்கம், அறிவியல் தொழிநுட்ப காட்சிகள் மற்றும் கண்காட்சி நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.

மறுதினம் மாலை சிறுவர்களுக்கான வேடிக்கை வினோத களியாட்ட நிகழ்வுகளும் ஏற்பாடாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

WAK