அதிபர் எஸ்.பி. செய்னுல் ஆப்தீன் – குறிஞ்சிப்பிட்டி

(ஆசிரியர் பைசுர் ரஹ்மான்)

“பொற்காலம்”

பாடசாலையெனும் சமூக நிறுவனத்தின் அதிபரின் வகிபாகமென்பது, உயிர்நாடி; அச்சாணி : மகத்தானது: இக்காலப்பகுதியில், பெருமளவு, சுமையானது; பொருளாதாரரீதியில் இலாபமற்றது: மனஉளைச்சலுக்கும் தொற்றாநோய்களுக்கும் விரைவில் ஆட்படுத்தக்கூடியது. ஆயினும் இலங்கையிலுள்ள 10’000 ற்கும் மேற்பட்ட சிறிதும் பெரிதுமான அனைத்து பாடசாலைகளிலும் அதிபர்கள் அலங்கரிக்கின்றனர். வினைத்திறனுக் அர்ப்பணிப்பும் சமூக அக்கறையும்மிக்க அதிபர்கள் பொற்றுதலுக்கு பாத்திரமானவர்கள்.

இப்பின்புலத்தில் பு/ கல்/ கப்பலடி கனிஷ்ட முஸ்லிம் வித்தியாலயத்தினால் அதன் மணிவிழா (1959 – 2019) நிமித்தம் வெளியிடப்பட்ட “சோலையின்; சுவடுகள்” சிறப்பு மலரை நுகரும் சந்தர்ப்பம் கிடைத்தது. குறித்த பாடசாலை ஆசிரியை (எ.டி.எப். ஜெஸ்ரினா) யினல் எழுதப்பட்ட “கப்பலடி கனிஷ்ட வித்தியாலயம் ஒரு பார்வை” எனும் தலைப்பிடப்பட்ட கட்டுரை இற்றை நாள் வரை அதிபர்களாகப் பதவி வகித்த 16 அதிபர்களின் பணிகளையும் சேவையின் தடங்களையும் நன்றியுடன் பதிவு செய்துள்ளது.

15 ஆவது அதிபராகப் பதவி வகித்த அதிபர் எஸ்.பி செய்னுல் ஆப்தீன் S.P. Sainulabdeen (SLPS) B.A. PGDE அவகளின் பாடசாலையின் முகாமைத்துவக் காலப் பகுதி “பொற்காலம்” என விதந்துரைக்கிறது இவ்வாக்கம். இதோ !

“… அதிபர் தரம் மூன்றைப் பெற்ற ஆசிரியர் எஸ்.பி செய்னுல் ஆப்தீன் அவர்கள் 2010 /02/05 அன்று பாடசாலை அதிபர் பொறுப்பை ஏற்று மிகவும் திறம்பட தனது சேவையைத் தொடர்ந்தார். இவரின் வருகை பாடசாலையின் பொற்காலம் எனக் கூறலாம். தரம் 5 வரை ஆரம்பப் பிரிவு மட்டுமே கொண்ட பாடசாலையை மேலதிகமாக 6 – 9 இடைநிலை வகுப்புகளையும் ஆரம்பித்து வைத்து பாடசலையின் தரத்தை மேலும் உயர்த்தியதுடன் பல தனவந்தர்களின் உதவிகளைப் பெற்று அதிபர் காரியாலயம் ஒன்றையும் கட்டினார். அக்கட்டிடமே இன்று வரை காரியலயமாக உபயோகிகப்பட்டு வருகிறது. இவரது காலத்தில் பாடசலையின் இணைப்பாடவிதான செயற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றன. இவர் பாடசாலை வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கினார்… 2010 ஆம் ஆண்டு அதிபர் எஸ்.பி. செய்னுல் ஆப்தீன் அவர்களின் முயற்சியின் காரணமாக இப்பாடசலைக்கு அனுமதிக்கப்பட்ட 10 கணினிகள் அடங்கிய கணினித் தொகுதி 2011 ஆம் ஆண்டு தற்போதய அதிபர் எம்.எம்.எம். நவுப் அவர்களினால் கொண்டு வரப்பட்டது…”

( பக்கம் 16)

https://www.facebook.com/faisur.rahuman