அமரர் கந்சாமி ஆசிரியர் பற்றி அன்னாரது மாணக்கர்கள் – நஸ்லியா
அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டும். நல்லதை தவிர அவரிடம் கண்டது எதுவுமில்லை!! நம் ஊரவர் நேசம் அவரது இறுதி கிரியைகள் வரை தொடர வேண்டும். நாமும் கடங்காரர்களாகி விட கூடாது!!!
காலை, பகல் சாப்பாடில்லை.. செத்து போய் வந்திருக்கேன்; ஒரு cup black coffee தாவேன் என இரைந்து கொண்டு தான் வீட்டில் நுழைந்தேன்.. sir இடமிருந்து call.. குற்ற உணர்வோடு.. sir என்றேன்.. baby.. நான் sir ஐ பார்க்க வந்தேன்.. வீடெல்லாம் திறந்தபடி.. sir ஐ காணவில்லை என அழுகுரலில் கூறி முடித்தாள் என் தோழி ஆசிரியை ரிஸ்பா. Washroom எல்லாம் பார்த்தீர்களா என்ற போது, செல்வியும் என்னோடு தான்.. எங்கும் பார்த்து விட்டோம்.. விம்மலாய் அவள் வார்த்தைகள்.
பதற வேண்டாம்.. நானும் வாரேன் என அடுத்த அடியில் road ல் பாய்ந்தேன். போகும் போதே அயலவர்களுக்கு call பண்ணியவளாக, sir வெளியே போவதை கண்டீர்களா விசாரித்துக்கொண்டே சென்றேன். 5 நிமிட நடையில் இருவரை தான் விசாரிக்க முடிந்தது.
அக்கம், பக்கம்.. ம்ஹும்.. யாரும் காணவில்லை. உள்ளே பதறும் நண்பிகள். Sir வுடன் நெருக்கமான சகோதரர்கள் இர்ஷாத், அஸ்பாக், பாத்திஹ், ஹம்ஸா, Dr. இல்ஹாம், Dr. மில்ஹான் ஒவ்வொருவராக sir எங்கே விசாரித்த போது.. வீட்டில் தான் இருப்பார் என பதில். Base Hospital OPD இலும் பார்க்கும்படி குமுதினி அக்காவிடம் கூறியவளாக மறுபடி வீட்டை வலம் வந்தேன். அந்த பாழாய் போன கிணற்றையும் தான் பதைப்பதைக்கும் மனதோடு எட்டி பார்த்தேன்.. ஆடாமல், அசையாமல், தன் பாட்டில் அது.. sir ஐ காணோம்.
மறுபடி வீதிக்கு ஓடி முன்னால் இருந்த கடையில் sir ஐ கண்டீர்களா என விசாரிக்க, sir வீட்டில் இருந்து வெளியே வரவே இல்லை என சொல்ல, மறுபடி sir வீடு ஓடி வந்தேன். வரும்போதே கடையில் CCTV இருக்குமே.. கடைசியாய் செல்வி கண்ட போது 3.30pm. இப்போது 5.00pm. இடைப்பட்ட நேரத்தை பார்க்க சொல்லலாமா என்ற சிந்தனையோடு சென்றேன்.
நீண்ட தடி ஒன்றை சகோதரர்கள் உள்ள இறக்க, பார்க்க முடியாமல் நாம் மறு பக்கம் நோக்கினோம். யார் கூட்டி போய் இருக்க வேண்டும்.. யாரை விசாரிக்காது விட்டோம் மனம் கணக்கு பார்க்க, கண்கள் கிணற்றை நோக்க.. அந்த ஆறாம் அறிவு அலறியது. சகோதர்கள் முகங்கள் பறை சாற்றின.. பெண்கள் ஓவென்று குமுற.. பதற வேண்டாம்.. சத்தம் வேண்டாம் அடக்கிய சகோதரர்கள்.
குட்டை சுவர் கொண்ட கிணறு.. தண்ணீர் வெட்டு வேறு.. தலை சுற்றலோடு இருந்த sir.. நமக்கு தெரியும் அவர் உறுதியான மனமும், எதையும் அறிவார்த்தமாக சிந்திக்கும் அவர் குணமும்.. இறைவன் ஒருவன் அன்றி சாட்சி கூற யாரும் இல்லை.
உடனே, உடலை எடுக்க துடித்த இளமைகள்.. எதையும் முறையாக செய்ய பழக்கப்பட்ட நாம். ஒவ்வொரு பக்கமும் சிதறியோடிய அவர் மாணாக்கர்.. பக்கத்து வீட்டவர்கள்..
நான் கடங்காரன் ஆகி விட கூடாது என எவ்வளவு உறுதியாக நின்ற ஆத்மா.. பணிவிடைகள் செய்யும் போது கூனிக்குறுகி விடுவார். இவை எல்லாம் உங்கள் வேலைகள் இல்லை என. மாதா, பிதா, குரு தெய்வம்.. நமக்கு வித்தியாசம் தெரிவதில்லை sir.. அடிக்கடி அவரை நேசிக்கும், பணிவிடை செய்த அன்புள்ளங்கள் கூறிய பதில்..