அமரர் கந்சாமி ஆசிரியர் பற்றி அன்னாரது மாணக்கர்கள் – எச். அஜ்மல்

வெள்ளைச் சீருடையுடன் மாணாக்கருடன் மாணாக்கராக கந்தசாமி ஆசிரியர்..! புத்தளம் சாஹிராவின் வரலாற்றில் இனி ஒரு கந்தசாமி ஆசிரியர் வருவாரா..?

Legacy…!

வெள்ளைச் சீருடையுடன் மாணாக்கருடன் மாணாக்கராக கந்தசாமி ஆசிரியர்..!  புத்தளம் சாஹிராவின் வரலாற்றில் இனி ஒரு கந்தசாமி ஆசிரியர் வருவாரா..?

 👌 மாணவர்களின் உலவியல் அறிந்து நேர்த்தியாக “அயன்” கலையாத வெண்ணிற ஆடை தரித்த ஆசிரியர்,
👎நேர்த்தி இல்லாத நிலையில் ஒருநாளும் பாடசாலையில் அவரைக் கண்டதில்லை
👌பெல் சத்தத்துடனேயே வகுப்பறை வாயிலில் நிற்கும் அந்த கம்பீர உருவம்,
👎 வகுப்பிற்கு கால தாமதமாகி ஒரு தடவை தானும் வந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை,
👌கசப்பான விஞ்ஞானப் பாடத்தை இனிப்பாகப் பாடப்போதனை ஊட்டிய ஆசான்
👎 பாட வேளைகளில் தனிப்பட்ட புராணம், பாடப்பரப்புக்கு அப்பால் சென்று என்றும் உபதேசங்கள், பயான்கள் போதிக்கவில்லை.
👌இறைவனின் நாட்டப்படி குறிப்பாக விஞ்ஞானப் பாடத்துக்கான “ரிசல்ஸ்”களுக்கான ஏகபோக உரிமை அவருக்கே உரியது.
👎 “ரிசல்ஸ்”களை சந்தோஷமாக சொல்ல சென்றாலும் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. அதனைக்கூறி அடுத்த வகுப்பு மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கு அப்பால் கூட்டு முயற்சிக்கு அவர் தனி உரிமைக் கோரிய விளம்பரங்கள் எங்குமே ஆதாரங்களாக இல்லை.
👌அவருக்கே உரித்தான கண்டிப்பு (முழங்கைக்கு மேலால் ஒரு நொள்ளு) அது பயம் அல்ல அவர் மீதான மதிப்பச்சம், எமது கற்றலையே தூண்டியது.
👎 அவரின் கண்டிப்பும், தண்டனைகளும் அவர் மீதோ, கற்றல் செயற்பாட்டிலோ வெறுப்பை ஏற்படுத்தவில்லை.
👌புத்தளம் மண்ணின் பல்துறை சார் உருவாக்கத்தில் அவரின் நடத்தையால், அவரளவிலான மரியாதையை முழு மனதுடன் வழங்கும் பல்லாயிரக்கணக்கான மனித உள்ளங்களை வெற்றி கொண்டார்
👎 என் வாழ்க்கை யை நாசமாக்கிய ஆசான் என்று அவரைத் தூற்றும் ஒருவரும் இல்லை
👌வகுப்பறைக் கற்பித்தலுக்கு அப்பால் பாடசாலை என்ற எமது பாசறையின் இல்ல விளையாட்டுப் போட்டிகளில் முன்னணி விளையாட்டுப் போட்டியாளராக மாணவர்களுடன் ஒன்றித்து வழிநடாத்தியவர்.
👎 துறைசார்ந்தோர் மட்டும் அவரின் அபிமானிகள் இல்லை. இடை விலகிய மாணாக்கரும் அவரின் இணைப்பாட விதான செயற்பாடுகளால் ஆகர்ஷிக்கப்பட்டார்கள்.
👌 மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தனியான மனம் நோகாத புனைப் பெயர்களுடன் மாணவர்களுடன் உறவு கொள்ளும் ஆசான்
👎 மாணவர்களுக்கு மத்தியில் சமநிலைத் தவறி சிலரைத் தொடராகப் பலி வாங்கும் ஆசிரியராக அவர் இருந்ததில்லை.
👌பாடசாலை என்ற கற்றல் நிறுவனத்தில் பாடப் புத்தகங்களையும், விளையாட்டு மற்றும் இதர வாழ்வியல் கலைகளையும் தனது முன்மாதிரிகளால் போதித்தார்.
👎 வகுப்பறைக் கற்றல் மட்டும் தான் அல்லது விளையாட்டு மட்டும் தான் என பாடசாலையின் ஆசிரியத்துவத்தை துருவப்படுத்தவில்லை. இரண்டிலும் சமநிலைத் தவறிய ஆசானாக நாம் அவரைக் காணவில்லை.

அன்புக்குரிய ஆசானே,
நீங்கள் விட்டுச் சென்ற முன்மாதிரிகளை உங்கள் மாணாக்கராகிய நாம் சுமக்கின்றோம்.
உங்கள் ஆன்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள்…!

என்றும் உங்களை மனதார மதிக்கும் ஒரு மாணவனாக,
(உங்கள் பாசையில் மொனிட்டர்)

எச். அஜ்மல்
30/10/2020