அமரர் கந்சாமி ஆசிரியர் பற்றி அன்னாரது மாணக்கர்கள் – ஆஸாத் ஸிராஸ்

“ஆசிரியர்களாகிய நாம் மரணித்தும் மாணவர்களின் உள்ளங்களில் வாழ்வோமா?? என்ற உணர்வு ஒவ்வொரு ஆசானிடத்திலும் இருக்க வேண்டும்”

“ஆசிரியர் கந்தசாமியின் லாஜிக்கள் எம்மால் மறக்க முடியாதவைகள்”

அவசரமாக என்னுடைய வகுப்பு நன்பர் தளத்திலிருந்து தொடர்பு கொண்டார் அவரை காணவில்லை…. காணவில்லை தேடிக் கொண்டிருக்கிறோம் என்று, இறுதியாக அவர் விழுந்திருக்கிறார்….😥

பொதுவாக அவர் அவருடைய கஷ்டங்களை அடுத்தவர்களுக்கு காட்டுவதற்கோ சொல்வதற்கோ விரும்பாதவர்….
கந்தசாமி ஆசிரியர் ஐயா….

எனது வாழ்வில் பல ஆசான்களை சந்தித்திருக்கிறேன்…..உண்மையிலேயே இவரை போன்ற கற்பித்தலை புனிதமாகக் கருதி அதனை ஒரு சேவையாக நினைத்து தன்னுடைய முழு மூச்சையும் அதற்காக வேண்டி அர்ப்பணித்துச் செயல்படக்கூடியவர்கள் மிகவும் சிலரே அந்த வகையில் ஆசிரியர் அவர்கள் எமக்கு மறவாத நினைவுகளை விட்டு விட்டுச்சென்றுள்ளார். அவரைப் பற்றி நிறைய விடயங்கள் சொல்வதற்கு இருந்தாலும் ஒரு விடயத்தை மாத்திரம் குறிப்பிடுகின்றேன்…..

பல வருடங்கள் அவரிடத்தில் கற்றிருக்கின்றேன் என்றாலும் இறுதியாக எமக்கு கற்பிப்பதை அவர் விரும்பவில்லை…..
*அவரது நியாயம் படிக்கின்றவர்களுக்கு கற்பித்துக் கொடுக்கிறவர் அல்ல உண்மையான ஆசிரியர் படிக்கத் தெரியாத, படிக்கக் கஷ்டப்படுகிறவர்களுக்கு வழிகாட்டுகின்றவரே உண்மையான ஆசிரியர்.* நீங்கள் படித்துக் கொள்வீர்கள் என்றார். (பொதுவாகவே நல்ல மாணவர்களுக்கும் படிக்கின்ற மாணவர்களுக்கும் கற்பிக்கவே ஆசிரியர்கள் விரும்புவார்கள்_அவரது லாஜிக்கில் ஆழமான உள்அர்த்தங்கள் இருந்தன)

அவரது ஊனா ஊனா ஊனா (உ+உ+உ) உரியம், உணவைக் கடத்தும், உயிர் உள்ளது இன்றும் மறக்க முடியவில்லை…. வகுப்பில் ப்ரொஜெக்டர் இல்லாவிட்டாலும் மினி பிரசன்டேஷன் ஓடும்…

இவ்வாசிரியரிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டிய ஏராளமான நல்ல பக்கங்கள் இருக்கின்றன. அவற்றை முன்மாதிரியாகக் கொள்வோம் என்றால் இவ்வாசிரியரின் நல்லவைகளை உயிர்ப்பிக்க்கூடிய மாணவர் பரம்பரைகளாக திகழ முடியும்….

அவரது வெளிச்சத்துக்கு வராத பல நல்ல பக்கங்களை நாம் அடையாளப்படுத்த வேண்டும். “மனிதர்களில் சிறந்தவர் மனிதர்களுக்கு பிரயோசனமாக வாழக்கூடியவர்”,  “ஆசிரியர்களாகிய நாம் மரணித்தும் மாணவர்களின் உள்ளங்களில் வாழ்வோமா?? என்ற உணர்வு ஒவ்வொரு ஆசானிடத்திலும் இருக்க வேண்டும்”

எதை வைத்து மாணவர்கள் எம்மை நினைவில் கொள்வார்கள் என்பதை யோசித்துப் பார்ப்போம்..!
சார் உங்களிடம் இருந்து கற்றுக் கொண்ட அன்பு மாணவன் :
மலேசியாவிலிருந்து ஆஸாத் ஸிராஸ்