அமரர் கந்சாமி ஆசிரியர் பற்றி அன்னாரது மாணக்கர்கள் – நஸ்ஹத்

அவரிடம் கற்ற காலங்கள் தாமதமானவை,குறைவானவை என்றாலும் அவர் மீதான பயம் கலந்த மரியாதை SEC என்னும் வகுப்புகள் சென்ற நாட்களுக்கு முன்னிருந்து இருந்தது.

கந்தசாமி சேர்.
என் மேலதிக வகுப்பின் O/L வகுப்பு ஆசான்.

அவரிடம் கற்ற காலங்கள் தாமதமானவை, குறைவானவை என்றாலும் அவர் மீதான பயம் கலந்த மரியாதை SEC என்னும் வகுப்புகள் சென்ற நாட்களுக்கு முன்னிருந்து இருந்தது.

எனது உடன்பிறப்புக்களும் சொந்தங்களும் அவரிடம் கற்றிருந்தமைதான் அதற்கான காரணம்.
யாழின் கணித,விஞ்ஞான இசைய புத்தளம் தான் அதிகம் இரசித்தது.

ஸாஹிரா கல்லூரி சுமார் தன் மூன்று தசாப்தங்களை இவரின் ஆளுமைக்காய் அரங்கேற்றம் நடத்தியிருக்கிறது.

பல துறைசார் நிபுணர்களின் பள்ளிக்காலப் பக்கங்களை இவர் ஆக்கிரமித்திருக்கிறார்.
மதம் ,ஊர் கடந்து நம் மண்ணையும் மாணவர்களையும் நேசித்த இந்த பேராசான் போன்றவர்கள்
எம் கல்விப் புலம் ஈட செய்ய முடியாத மறுமலர்ச்சியாளர்கள்.

உப்புத்தளத்தின் கல்வித்தளம் உங்களை என்றும் ஞாபகமூட்டும்.

Nas’hath Marikkar