அமரர் கந்தசாமி ஆசிரியர் பற்றி அன்னாரது மாணாக்கர்கள் – பைசுர் ரஹ்மான்

என்போன்ற எண்ணற்ற மாணவ மாணவிகளின் ஏற்றத்திற்கு ஏணியாகவும் பன்முக நடிபங்குகளையும் கொண்டிலங்கிய ஆசான் அவர்கள், பயன் பெற்ற நன்றிமிக்க நெஞ்சங்களில் நினைவின் தடமாய் என்றும் வாழ்ந்து வருவார் என்பதில் ஐயமில்லை !

ஆழ்ந்த அனுதாபங்கள்…!

மாணவர்களின் இதயங்களில் இடம் பிடித்த எமது ஆசான் கே கந்தசாமி அவர்களின் (1949 – 2020) மறைவு ஒரு சோக நிகழ்வாகும். எனது இன்றைய திருப்திகரமான வாழ்நிலைக்கு ஆசான் அவர்கள் முக்கிய கதாபாத்திரமாக திகழ்ந்ததை எப்போதும் நன்றியுடன் நினைவு படுத்தியவனாகவே இருக்கிறேன்.

விசேட தேவையுடைய (Special need) மாணவன் என்பதை இனங்கண்டு சகல ஒத்துழைப்புகளையும் வழங்கிவந்ததை என் வாழ்நாளில் மறந்துவிட முடியாது. விஞ்ஞானப் பாடத்தில் எனக்கு விருப்பம் இல்லை என அடம்பிடித்த போது , எனது கையை பிடித்தபடியே அதிபர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அதிபர் மூலமாக எனக்கு அறிவுரைக் கூறி பாடத்தின் முக்கியத்துவத்தைக் அறிவுறுத்த வைத்தார்.

சாஹிராவில் தொண்டர் ஆசிரியனாக கடமையாற்றிய காலப்பிரிவில் ஆலோசகராகவும் உந்துசகியாகவும் விளங்கினார்.

ரசீத் சேரின் நிர்வாகத்தின் கீழ் (காசிம் பலஸ் ) இயங்கிய சைதா கல்வி நிறுவனத்தில் எனது மதிப்பிற்குரிய கந்தசாமி ஆசான் அவர்கள் கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களைக் கற்பிக்கின்ற அதேவேளை, அடுத்துள்ள அறையில் நான் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு Logic & Scientific Method கற்பிப்பது ஒர் இனிமையான அனுபவமாகும். LOGIC AND SCIENTIFIC METHOD LEANER’S ASSOCIATION (LOSMELA) வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் எமது அழைப்பை ஏற்று தவறாது சமூகம் தந்து சிறப்பிப்பார்.

என்போன்ற எண்ணற்ற மாணவ மாணவிகளின் ஏற்றத்திற்கு ஏணியாகவும் பன்முக நடிபங்குகளையும் கொண்டிலங்கிய ஆசான் அவர்கள், பயன் பெற்ற நன்றிமிக்க நெஞ்சங்களில் நினைவின் தடமாய் என்றும் வாழ்ந்து வருவார் என்பதில் ஐயமில்லை !

M.B. Faizur Rahuman (SLPS 1)