அரச ஊழியர்களுக்கான இம்மாத சம்பளம் 10 ஆம் திகதி?

புனித ரமழான் நோன்பு பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான இம்மாத சம்பளத்தினை இமமாதம் 10 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ …

Irshad Rahumadullah

புனித ரமழான் நோன்பு பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான இம்மாத சம்பளத்தினை இமமாதம் 10 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ வழங்குவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை  அரச திணைக்களங்களுக்கு சுற்று நிருபம் மூலம் உடன் அறிவிக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்தனவிடம் வேண்டியுள்ளார்.

இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்,மற்றும் அரச முஸ்லிம் ஊழியர் ஒன்றியம் உட்பட பல அமைப்புக்கள் இது தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் முன் வைத்த வேண்டுகோளினையடுத்து இந்த வேண்டுகோளினை வாய் மூலமாகவும்,எழுத்து மூலமாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் முன் வைத்துள்ளதாக அமைச்சரின் இணைப்பு  செயலாளர்  தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா தெரிவித்துள்ளார்.

புனித ரமழான் நோன்பினையடுத்து நோன்புப் பெருநாள் இம்மாதம் 16 ஆம் திகதி எதிர்ப்பார்க்கப்படுகின்ற படியால் அரச ஊழியர்களின்  இம்மாத சம்பளத்தினை துரிதமாக வழங்குவதன் அவசியம் தொடர்பிலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பொது நிர்வாக அமைச்சரிடத்தில் எடுத்துரைத்துள்ளார்.

மேற்படி வேண்டுகோளை ஏற்றுக் கொண்டுள்ள அமைச்சர் அதிகாரிகளுக்கு இது தொடர்பில் ஆலுாசனை வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

அதே வேளை தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் முஸ்லிம் ஊழியர்களுக்கும் அவர்களது சம்பளத்தினை முற்படுத்தி கொடுக்க ஆவணம் செய்யுமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் பொதுவான வேண்டுகோளினையும் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 thought on “அரச ஊழியர்களுக்கான இம்மாத சம்பளம் 10 ஆம் திகதி?

Comments are closed.