அறிவியல் மரபுக்கு வித்திட்ட பேரறிஞர் சைமன் காசிச் செட்டி – 03

(“கலா பூஷனம்” , “தாஜுல் அதீப் ” அல்ஹாஜ் A.N .M .ஷாஜஹான் அவர்கள் சைமன் காசிச்செட்டி பற்றி எழுதிய பெரிய கட்டுரை ஒன்றின் சுருக்க வடிவம் இங்கு தரப்படுகின்றது. . )

simon 1

(‘கலாபூஷணம்’, ‘தாஜுல் அதீப்’, அல்ஹாஜ் ஏ.என்.எம்.ஷாஜஹான்)

1831ம் ஆண்டில் புத்தளத்தில் இருந்த படைத்தளபதி பொஸ்டர் என்பவரின் மனைவியின் அறிமுகம் சைமன் காசிச் செட்டிக்குக் கிடைத்ததமை அவரின் ஆய்வாக்கங்களுக்கு உறுதுணையாக அமைந்தது. அப்பெண்மணி இலக்கியத்தில் ஆய்வுத்துறையில் தேர்ச்சி பெற்றவராக இருந்ததனால் ஒன்பது வருட காலம் அவரின் வழி காட்டுதலில் ஆய்வுத்துறை எழுத்துக்களில் ஊக்குவிக்கப்பட்டார். அக்காலகட்டத்தில் பின்வரும் ஆக்கங்கள் மூன்றை காசிச் செட்டி எழுதினார்.

  1. தமிழ்ச் சாதிகளின் பாகுபாடுகள் பற்றிய குறிப்பு.
  2. புத்தளம் மாவட்டத்திலுள்ள முக்குவர்களின் பூர்வீகமும், வரலாறும் பற்றிய சுருக்கம்.
  3. தமிழ் சாதியர்கள் பின்பற்றிய வைபவங்கள் பற்றிய ஒரு கட்டுரை.

குறித்த மூன்று ஆரம்ப ஆக்கங்களையும் நோக்கும் போது தமிழ் மக்களின் வாழ்வு பற்றிய ஆய்வில் கரிசனை கொண்டிருந்தமை புலனாகும். இவ்வாய்வாக்கங்களை சேர் எட்வர்ட் பாண்ஸ் பாராடியுள்ளதுடன் அவைகளை லண்டன் அரசு வேத்தியல் ஆசிய கழகத்தின் தலைவராக இருந்த சேர் அலெக்ஸ்சாண்டர் ஜோன்ஸ்டன் என்பவருக்கு அனுப்பி வைத்தார்.20150310_100233

இந்தியாவில் பல்லின சாதிகள்,  முக்குவர்கள், ஹிப்பரஸ் என்ற புராதன நகரத்தின் இடப்பகுதி ஆகிய மூன்று கட்டுரைகளையும் பெற்ற சேர் ஜோன்ஸ்டன் சைமன் காசிச் செட்டியை லண்டன் அரசு ஆசிய வேத்தியல் கழகத்தின் உறுபினராகச் சேர்த்துக் கொள்வதில் மகிழ்வடைந்தார்.

ஹிப்பரஸ் எனப்படும் குதிரை மலையின் வரலாற்றாய்வை 1830ம் ஆண்டில் ” இன்டோ பிலஸ் ” என்னும் தலைப்பில் சென்னை அரசு வர்த்தமானி பிரசுரஞ் செய்தது.

தொடர்ந்து சிங்களத்துக்கும், மாலைத்தீவு மொழிக்கும், சமஸ்கிருதத்திற்கும் , ஜாவா மொழிக்கும் இடையேயுள்ள தொடர்பை விளக்கி இலங்கை வர்த்தமானியில் கட்டுரைகளை வெளியிட்டார்.


தொடரும்…..