அறிவியல் மரபுக்கு வித்திட்ட பேரறிஞர் சைமன் காசிச் செட்டி – 05

(“கலா பூஷனம்” , “தாஜுல் அதீப் ” அல்ஹாஜ் A.N .M .ஷாஜஹான் அவர்கள் சைமன் காசிச்செட்டி பற்றி எழுதிய பெரிய கட்டுரை ஒன்றின் சுருக்க வடிவம் இங்கு தரப்படுகின்றது. . )

(05)20150310_100233

         (‘கலாபூஷணம்’, ‘தாஜுல் அதீப்’, அல்ஹாஜ் ஏ.என்.எம்.ஷாஜஹான்)

புத்தளத்தின் உதவி அரசாங்க அதிபரும் மாவட்ட நீதிபதியுமாயிருந்த திரு மூயாட் என்பவர் சைமன் காசிச் செட்டியின் இலக்கிய முயற்சிக்கு மிகவும் ஊக்கமளித்தார்.

1834ல்  ” பரவர்களின் வரலாறும் பூர்வீகமும் ” என்ற அவரது ஆய்வுக்கட்டுரை ஆசிய வேத்தியல் கழகத்தின் சஞ்சிகையில் வெளியானது. 1833ம் ஆண்டில் மிகவும் சிறப்பானதும், உபயோகமானதுமான பெரிய ஆக்கமான  ” சிலோன்  கெசெட்டியர் ” என்ற நூலை சைமன் காசிச் செட்டி உருவாக்கினார்.

காசிச் செட்டியின் பாரிய முயற்சியினால் உருவாகிய இந்த உன்னதமான படைப்பை அவரின் அரிய சாதனை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

மானிடவியல், சமூகவியல், புவியியல் ஆகிய அத்தனை கூட்டுச் சேர்க்கைகளும், பண்பாடுகளும் இந்நூலில் ஒரு தனி மனிதனால் ஆக்கப்பட்டமை பிரமிப்பூட்டுவதாகும். இந்நூலைப் பற்றி விமர்சனம் செய்வதாயின் நீண்டு விரியும்.

இந்நூல் 1834ம் ஆண்டில் அச்சாகி வெளியானது. இந்நூலின் பிற்சேர்க்கைகளில் ” இலங்கை முஸ்லிம்களின் நடை  முறைகளும், மரபுகளும் ” என்ற கட்டுரையும் இடம் பெற்றது.

இந்நூலுக்கு ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகே பல அறிஞர்களால் பல மாவட்டங்களில் கெசெட்டியர்களும், மனுவல்களும் உருவாக்கப்பட்டன என்பதை குறிப்பிட வேண்டும்.

இந்நூல் 1972ல் களனி வித்தியாலயங்கள் பல்கலைக்கழக வளாகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் தென்னக்கூன் விமலானந்த அவர்களினால் தட்டச்சுப் பிரதியாக மீள் பிரசுரஞ் செய்யப்பட்டது.

அதற்குப் பின்பு 1989ம் ஆண்டில் சைமன் காசிச் செட்டியின் வழித்தோன்றலான சட்டத்தரணி திரு மேர்வின் காசிச் செட்டியின் முயற்சியினால் அச்சில் இந்நூல் வெளியிடப்பட்டது.

20150310_110952 20150310_111021

20150310_105512

 

தொடரும்…