அல்பா வர்த்தக நிலைய முதல் மற்றும் இரண்டாம் மாடிக் கடையறைகளுக்கான கேள்விமனு கோரப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் 23.02.2021 மு.ப. 10.30 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படுவதோடு, 23.02.2021 மு.ப. 10.30 மணிக்கு புத்தளம் நகர சபை அலுவலகத்தில் கேள்வி மனுக்கள் திறக்கப்படும். இக்கடையறைகள் தொடர்பான மேலதிக விபரங்களை அலுவலக நேரத்தில் மாத்திரம் …

புத்தளம் நகர சபையினால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற அல்பா வர்த்தக நிலையத்தின் நிர்மாணப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இதன் நிர்மாணப்பணிகள் நிறைவு பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதனடிப்படையில் 02.02.2021 ஆம் திகதி தொடக்கம் 22.02.2021 ஆம் திகதி வரை கேள்வி விண்ணப்பப்படிவங்களை நகர சபை அலுவலகத்தில் நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் 23.02.2021 மு.ப. 10.30 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படுவதோடு,  23.02.2021 மு.ப. 10.30 மணிக்கு புத்தளம் நகர சபை அலுவலகத்தில் கேள்வி மனுக்கள் திறக்கப்படும். இக்கடையறைகள் தொடர்பான மேலதிக விபரங்களை அலுவலக நேரத்தில் மாத்திரம் 0322265275 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நகர சபை கணக்காளர் ஏ.எம்.எம். நாசிர் அவர்களை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

புத்தளத்தின் மாபெரும் பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்தவுள்ள இவ்வியாபாரத் தொகுதியில் நீங்களும் உங்களுக்கென சொந்தமான கடையறைகளை ஒதுக்கிக்கொள்ள விரைந்திடுங்கள்.