அல்ஹைரா முன்பள்ளியின் வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்வுகள்

புத்தளம் சவீவபுரம் அல்ஹைரா முன்பள்ளியின் வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்வுகள் வெள்ளிக் கிழமை (06) மாலை முன்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

ரூஸி சனூன்  புத்தளம் 
புத்தளம் சவீவபுரம் அல்ஹைரா முன்பள்ளியின் வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்வுகள் வெள்ளிக் கிழமை (06)  மாலை முன்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

முன்பள்ளிகளின் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் இந்த சிறுவர் சந்தையும் உட்படுத்தப் படுகின்றது.

முன்பள்ளி மாணவர்கள் மத்தியில் நேர்மையான கொடுக்கல் வாங்கல் பற்றிய தெளிவுகளை ஏற்படுத்தல், கணிதம் தொடர்பான ஆரம்ப அறிவினை புகுத்துதல் மற்றும் பழ வகைகள் மரக்கறி வகைகளை தெரிந்து கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு படிப்பினைகளை இத்தகைய சிறுவர் சந்தைகள் தோற்றுவிக்கின்றன.

இந்த சிறுவர் சந்தையின் ஆரம்ப நிகழ்வில் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், நகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம். ரபீக், ஏ.எம். அஸ்கின், பீ.எம். ரனீஸ், நகர சபையின் நிர்வாக அதிகாரி எச்.எம். சபீக் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.