அல் முஹ்பாத் முன்பள்ளியின் 22 வது வருட நிறைவும் வருடாந்த விளையாட்டு போட்டிகளும்

அல் முஹ்பாத் முன்பள்ளியின் 22 வது வருட நிறைவு மற்றும் வருடாந்த விளையாட்டு போட்டிகள் என்பன சனிக்கிழமை (07.04.2018) முழுநாளும் புத்தளம் ஸாஹிரா….

ரூஸி சனூன்  புத்தளம் 

புத்தளம் காஸிம் மாவத்தை அல் முஹ்பாத் முன்பள்ளியின் 22 வது வருட நிறைவு மற்றும் வருடாந்த விளையாட்டு போட்டிகள் என்பன சனிக்கிழமை  (07.04.2018) முழுநாளும் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

முன்பள்ளி பணிப்பாளர் லரீபா சுஹைல் தலைமையில் நடைபெற்ற இந்த இல்ல விளையாட்டு போட்டியில் அன்னாசி, திராட்சை, தர் பூசணி, ஸ்ட்ராபெர்ரி ஆகிய நான்கு இல்லங்களை சேர்ந்த 80 மாணவர்கள்  கொண்டனர்.

50 மீ ஓட்டம், சிறுவர் சைக்கிள் ஓட்டம், சாக்கு ஓட்டம், டொபி  பொறுக்குதல், தடை தாண்டி ஓட்டம், தேசிக்காய் கரண்டி ஓட்டம், சங்கீத கதிரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன.

நடைபெற்று முடிந்த சகல போட்டிகளின் பிரகாரம் 82 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தினை தர் பூசணி இல்லமும், 75 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தினை திராட்சை இல்லமும், 30 புள்ளிகளை பெற்று மூன்றாம்  இடத்தினை அன்னாசி இல்லமும், 25 புள்ளிகளை பெற்று நான்காம் இடத்தினை ஸ்ட்ராபெர்ரி இல்லமும் பெற்றுக்கொண்டன.

இல்ல அலங்கரிப்பில் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களை முறையே திராட்சை, தர் பூசணி, அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி ஆகிய இல்லங்கள் பெற்றுக்கொண்டன.

நான்கு இல்லங்களுக்கும் முன்பள்ளி ஆசிரியைகளான ப்ரபாசிரி, சஸ்மீரா, வனிதா மற்றும் நஸ்லிபா ஆகியோர் பொறுப்பாக கடமையாற்றினர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.