ஆசிரியர் நிசார் மெளலவி அவர்கள்…

புத்தளம் சாஹிரா கல்லூரியில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக கடமை புரிந்த ஒரு சில ஆசான்களுள் ஒருவர். மார்க்க கல்வியை எமக்களித்த ஆசான்.

புத்தளம் சாஹிரா கல்லூரியில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக கடமை புரிந்த ஒரு சில ஆசான்களுள் ஒருவர். மார்க்க கல்வியை எமக்களித்த ஆசான். ஹுதா பள்ளியில் சுமார் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இமாமாக தலைமை தாங்கியதோடு புதுப்பள்ளிவாயலில் பல வருடங்கள் ஜும்மா பிரசங்கம் செய்தவர்.

சாஹிராவில் தனது முப்பது வருட கால ஆசிரியப் பணியில் அரசியல் பழிவாங்கள் காரணமாக ஒரு நாள் மாத்திரம் வேறு ஒரு பாடசாலையில் கற்பித்து விட்டு திரும்பியதாக் கூறினார். ஆசிரியர் திரு கந்தசாமி அவர்களின் உற்ற நண்பர். இருவரும் நீண்ட காலம் ஒன்றாக பனி புரிந்து ஒன்றாக ஓய்வு பெற்றவர்கள்.

இல்ல விளையாட்டுபோட்டி, கல்விச்சுற்றுலா போன்ற நிகழ்வுகளின் ஏற்பாட்டு குழுவின் முதன்மையானவராக இருப்பார். ஜின்னா தொப்பியும், லுமாலா சைக்கிளும் கன்னுக்கெட்டிய தூரத்திலேயே ஆசிரியரின் வருகையை உறுதி செய்யும் அவரின் அடையாள சின்னங்கள். ஹுதா பள்ளியும் இவ்வாசானின் பெயரும் பிரிக்க முடியா இரட்டை கிழவிகள்.எளிமையான வாழ்க்கை முறை, மறவாத புன்னகை, நேரம் தவறாமை, கண்டிப்பு அனைத்தையும் அளவோடும் அழகோடும் கையாளும் திறமை படைத்தவர்.

பல தசாப்த சேவைகளை சப்தமின்றி செய்துவிட்டு, தனது முதுமைக்காலத்தில் பழைய நினைவுகளை மீட்டியவாறு சில வயோதிப வருத்தங்களுடண் போராடிக்கொண்டிருக்கின்றார்.

அவரின் பூரண சுகத்துக்காகவும் ,அவரின் தூய சேவையை பொருந்திக்கொள்ளவும் இறைவனை பிரார்த்திப்போம்.