ஆடைத்தெரிவும் கொழும்புப் பயணமும்
[எம்.ஏ.பீ. வசீம் அக்ரம் – புத்தளம்] இளைஞர் பட்டாளங்கள் தமக்கே உரிய வாலிப அடையாளங்களுடன் சன் கிளாஸ், தலைக்கு வித விதமான கீரிம்கள் தடவி
பண்டிகைகள் நெருங்க நெருங்க பதற்றமும் அவசரமும் அதிகரிக்கத்தான் செய்யும். எங்குப்பார்த்தாலும் சனக்கூட்டம். வீதி நெடுகிலும் தங்களது சிறுப்பிள்ளைகள் சகிதம் கடைத்தெருக்களை நோக்கி.
எப்போதுமா வாங்கப்போகிறோம் என்றவாறு தனக்கு தனது குடும்ப உறுப்பினர்களுக்கு என்று பார்த்து பார்த்து பொருள் கொள்வனவில் ஈடுப்படுகின்றனர்.
இவ்வாறான பண்டிகைகள் எனும் போது நமது ஊரிலிருந்து அநேகமானோர் தலைநகரை நோக்கி செல்வதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. பண்டிகைகளா, வாகனங்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டு குடும்பங்கள் ஒன்று சேர்ந்து குதுகலமாக கொழும்பு பயணமாகின்றனர்.
மறுப்புறம் பஸ் வண்டிகள் நிறைகிறது. இளைஞர் பட்டாளங்கள் தமக்கே உரிய வாலிப அடையாளங்களுடன் சன் கிளாஸ், தலைக்கு வித விதமான கீரிம்கள் தடவி, வாசனைத்திரவியங்கள் மண மணக்க கொழும்பை நோக்கி விரைகின்றனர்.
கொழும்பை அடைந்ததும் பயண அலுப்பை போக்க கை, கால் முகங்களை கழுவி கொஞ்சம் சுறு சுறுப்படைந்த வண்ணம் காலை ஆகாரங்களை வாயில் திணிக்கின்றனர்.
கொழும்பு மாநகரம் பாரிய கட்டிடங்களால் சூழப்பட்டு வியாபார நிலையங்கள் பாரிய பாரிய பெயர் பலகைகளுடன் காட்சியளிகின்றது.வாடிக்கையாளர்களை கவரும் விதமாக காட்சிப்படுத்தல்கள், கவர்ச்சிகரமான வாசகங்கள் (உள்ளுக்கு வாங்க, வாங்கிட்டு போங்க) என மக்களை தன் பக்கம் ஈர்க்கும் சாமர்த்தியங்களை கைவசம் வைத்து கம்பீரமாக காட்சியளிகின்றன நவநாகரிக காட்சியகங்கள்.
அதனோடு சேர்த்தாற் போல் வீதி நெடுகிலும் சிறு சிறு வியாபாரிகள் தமக்கே உரிய பாணியில் மக்களை கூவிகூவி அழைத்து தமது வியாபார நடவடிக்கைளை பேணுகின்றனர்.
சிவாஜி சப்பாத்து, அனார்கலி சல்வார், ஒஸ்தி கண்ணாடி, கல்கி கவுண், மசாகளி சல்வார் என இன்னோரன்ன பெயர்கள் காதுகளில் ஒலித்தவண்ணம் இருக்கிறது. இவைகள் வியாபார தந்திரங்களாக பயன்படுத்தப்படுகின்றது. நாமும் இவைகளின் பால் ஈர்க்கப்பட்டு வர்ணமயமாக ஆசை படுகிறோம்.
எமது ஊர்களிலும் இவ்வாறான நிலையங்கள், கடைத்தெருக்கள் இல்லாமல் இல்லை. என்ற போதும் பண்டிகை காலம் என்றால் கொழும்புக்குத்தான் போகவேண்டும் என்ற கலாச்சாரம் எம்மத்தியில் மிக வேகமாக பரவியுள்ளது. மனிதனின் எண்ணங்கள் பலவிதமாக காணப்படுகின்றமை இதற்கு காரணமாக நோக்க முடியும் அப்படித்தானே..
ஒரு சிலர் கொழும்புக்கு செல்வதற்கு விலையை ஒரு காரணமாக முன்வைக்கின்றனர். தலைநகர் என்றபடியால் எல்லாப்பொருட்களையும் குறைந்த விலையில் மொத்தமாகவும், சில்லறையாகவும் பெற முடியும். கழிவுகள் மற்றும் இதர சந்தோஷ வவுச்சர்களை பெறமுடியும் என்ற கருத்தும் நிலவுகின்றது.
இன்னும் ஒரு சிலர் புதிய புதிய டிசைன்களில் ஆடைகளை கொள்வனவு செய்வதற்காக கொழும்பு செல்வதற்கு காரணமாக முன்வைக்கின்றனர். நவநாகரிக உலகில் புதிது புதிதாக பல்வேறு வகைகளாக, பல டிசைன்களில் ஆடைகள் தொடங்கி சப்பாத்துக்கள் வரை அனைத்தும் வெளியிடப்படும் போது அவைகளை இங்கிருந்தால் பெறமுடியாது, அவைகள் காலதாமதமாகவே இங்கே கிடைக்கிறது என்றபடியினாலும் கொழும்பை நாடுகின்றனராம்.
இவைகள் எல்லாம் ஒருபக்கம் ஏற்றுக்கொள்ள முடிந்தாலும் நித்திரை விழித்து நேரங்காலத்தோடு எழும்பி தயார்படுத்திக் கொண்டு பேருந்தை நாடி, மூன்று நான்கு மணித்தியாலயம் பயணித்து வீதி முழுவதும் நடந்து திரிகிறார்கள். கால் கடுக்க மாடிப்படிகள் ஏறி இறங்கி தமக்கு பிடித்த பொருட்களை தெரிவு செய்கின்றனர்.
இவ்வாறு தெரிவு செய்த ஆடைகளை ஒத்திகை பார்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து நேரங்கள் விரயம் செய்யப்படுகின்றன. மெது மெதுவாக வரிசை நகர்கின்றது அவர்களின் முறை வரவே போய் அவசர அவசரமாக ஒத்திகை பார்த்துவிட்டு கவுன்டரில் பணத்தை செலுத்தியவுடன் சிறு கழிவு மனதில் பெரும் மகிழ்ச்சி.
நடந்து நடந்து களைத்து போனது. பசி வயிற்றை கிள்ளியது. மதிய உணவுக்கான கடையை தேடி அலைந்து அமர்ந்தால் என்றுமில்லாதவாறு விலை. கேட்டால் சீசன் விலையாம். இதற்கு நம்மூர் எப்பவுமே சிறந்தது. என்று தான் சொல்ல வேண்டும்.
சாப்பிட்டு முடிந்து புதுத்தெம்புடன் மறுவேலையை தொடர ஆரம்பிக்கிறது கொள்வனவு சக்கரம். பல இடங்களில் தேடி பல விலைகளோடு ஒப்பிட்டு ஆடைதெரிவுகளை வேண்டி நின்று ஓடித்திரியும் போது இலேசான தாகங்கள் காரணமாக குளிர்பானங்களுக்கு செலவு மேற்கொள்ளப்படுகின்றது.
மன நிம்மதியோடு பண்டிகையை சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கோடு ஆடைக் குவியலோடு ஊரை வந்தடைந்து நிம்மதியாக உறங்குகின்றனர். காலை எழும்பி ஆடைகளை சரிபார்த்தால் சிலபோது ஒத்திகைகள் பிழையாகின்றது. அலைச்சல்கள் விரயமாகின்றது.
ஒவ்வொருத்தர்களும் ஒவ்வொரு விதம் அதனால் தான் பலவிதங்களில் பல்வேறு விதமாய்..
பண்டிகைகள் – கொழும்பு பயணம் – வித்தியாசமான கலாச்சாரம்..
தம்பி வசீம் உங்களுக்கு கஷ்டமா இருந்தா போகாதின்கப்பா
சபாஸ் வசீம். கலக்குதீங்களே. மேலும் ஆக்கங்கள் வரட்டும்
உண்மைதான் சேர்,
சொந்த அனுபவங்களும் இருக்கிறது. பந்தங்களின் அனுபங்களும் இருக்கிறது.=D
சொந்த அனுபவம் போல இருக்கு, வசீம் அகரம். அவ்வளவு தத்ருபமா சொல்றீங்க.