ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலய வைரவிழா

ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயம் 1957ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு 1958ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இரு ஆசிரியர்களையும் 35 மாணவர்களையும் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையின் முதலாவது அதிபராக …

புத்தளம் கல்வி வலயத்திற்குற்பட்ட கல்பிட்டி கோட்டத்தில் அமைத்துள்ள ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வைரவிழா நிகழ்வுகள் கடந்த 10.02.2021 அன்று பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மிக சிறப்பாக நடைபெற்றது. அதிபர் A.H.A. சகூர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலையின் கடந்தகால வரலாறு பற்றிய ஓர் உரை மெளலவி N.M.P.அப்துல்ரசீத் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயம் 1957ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு 1958ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இரு ஆசிரியர்களையும் 35 மாணவர்களையும் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையின் முதலாவது அதிபராக A.N.M.சாஜஹான் கடமைபுரிந்துள்ளார். அந்த வரிசையில் 24 ஆவது அதிபராக தற்போதைய அதிபர் திகழ்கிறார். க.பொ. த. உயர்தரம் வரையான வகுப்புக்கள் உள்ள இப்பாடசாலையில் தற்போது சுமார் 1250 மாணவர்கள் கல்விபயில்கின்றனர்.

(தகவல் அப்துல் ஹலீம் – ஜப்பான்)

/Zan