இலங்கையின் தேசிய சின்னங்கள் -தேசியக் கொடி-2

“கனம் சபாநாயகர் அவர்களே! பாராளுமன்ற உறுப்பினர்களே! தங்க நிறப் பின்னணியில் வலது கையில் வாளொன்றை ஏந்தியவாறு மஞ்சள் வர்ணத்தில் சிங்கமொன்று அமையுமாறுள்ள கொடியை …

Z . A . ஸன்ஹிர் அவர்களால் 1997ல் வெளியிடப்பட்ட ‘இலங்கையின் தேசிய சின்னங்கள்’ என்ற கையேட்டில் இருந்து இத் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. 
தேசியக் கொடி (தொடர்ச்சி)
4029R-239294
“கனம்  சபாநாயகர் அவர்களே! பாராளுமன்ற உறுப்பினர்களே! தங்க நிறப் பின்னணியில் வலது கையில் வாளொன்றை ஏந்தியவாறு மஞ்சள் வர்ணத்தில் சிங்கமொன்று அமையுமாறுள்ள கொடியை 1815 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பின் இங்கிலாந்திற்குக் கொண்டு செல்லப்பட்ட, ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க மன்னனின் ஆட்சிக் கொடியான சிங்கக் கொடியை மீண்டும் சுதந்திர இலங்கையின் உத்தியோகப்பூர்வமான கொடியாக இச்சபை ஏற்றுக்கொள்கிறது”.
Flag-Olympic-Village
மத்திய கொழும்பு பாராளுமன்ற உறுப்பினரும், தொழில் சமூக சேவைகள் பிரதியமைச்சருமான திரு ஏ.ஈ.குணசிங்க அவர்கள் இப்பிரேரணையை ஆமோதித்தார். தமிழ் எம்பீக்களுள் பலர் இதனை ஆதரிக்கவில்லை. ” தமிழர்களின் நந்திக் கொடியும், முஸ்லிம்களின் இளம் பிறைக்கொடியும் தேசியக் கொடிகளாக இருக்க வேண்டும் ” எனத் தமிழரசுக் கட்சித் தலைவர் திரு எஸ்.ஜே.வீ.செல்வநாயகம் பிரேரித்தார். அதனை வட்டுக்கோட்டை எம்.பீ திரு ஜே.கணகரத்தினம் ஆமோதித்தார். ” ஒரு நாட்டில் மூன்று தேசியக் கொடிகள் இருப்பது சட்டவிரோதமானது ” என அப்போதைய நிதியமைச்சர் திரு ஜே.ஆர்.ஜயவர்த்தன  அதனை ஆட்சேபித்தார்.வவுனியா எம்.பீ.திரு சுந்தரலிங்கம்  ” சிங்கக்கொடியின் சிவப்புப் பின்னணியில் அரைவாசி மஞ்சளும், அரைவாசி வெள்ளையும் இருக்க வேண்டும் ” என்றார். இதனைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதி திரு கே.டி.நடராஜா ஆமோதித்துப் பேசினார்.
 
8439382237_32f4694786_z
1948 பெப்ரவரி 04 இல் இலங்கையின் முதலாவது சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட போது இலங்கைக்கென ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தேசியக்கொடி இருக்கவில்லை.தேசியக்கொடி பற்றிய பிரச்சினை இழுபறியாகவே இருந்தது.எனினும் சுதந்திர இலங்கையின் முதற் பிரதமர் திரு டீ.எஸ்.சேனநாயக்க சிங்கக்கொடியை ஏற்றி வைத்தார். 10.02.1948 ல் இலங்கையின் முதலாவது பாராளுமன்றம் ஆரம்பமான போது சிங்கக்கொடியுடன் பிரித்தானியக் கொடியும் ஏற்றப்பட்டது. பெப்ரவரி 12 இல் கண்டியில் சுதந்திர தினக் கொண்டாட்டம் நடைபெற்ற போது ஸ்ரீ தலதா எண்கோண மண்டபத்தில் சிங்கக்கொடியே ஏற்றப்பட்டது. இச்சுதந்திரக் கொண்டாட்டத்தின் போது நாட்டின் எப்பகுதியிலாவது நந்திக்கொடியை ஏற்றக்கூடாது எனவும் சிங்கக்கொடியை ஏற்றுவது பொருத்தமற்றது எனக்கருதும் பட்சத்தில் ஆங்கிலக் கொடியை ஏற்றலாம் எனவும் அன்றைய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டது.
                                                                                                                               தொடரும்…